Sunday, March 06, 2005

சேயற்படு உணவுகள் [Functional foods]

சேயற்படு உணவுகள்

சேயற்படு உணவுகள் எனப்படுபவை திருப்தி தரக்கூடிய வகையில் உடலின் ஒனறுக்கு மேற்பட்ட செயற்பாடுகளில் செல்வாக்கு செலுத்துவதுடன் தமது போசணை செயற்பாடுகளுக் மேலதிகமாக உடல் சுகநலத்தை மேம்படுத்துவதுடன் நோய் ஏற்படும் வாய்ப்பை குறைப்பவையுமாகும். இவை சாதாரண உணவு வகையிலிருந்து மாறுபடாதிருப்பதுடன் சாதாரணமாக உள்ளெடுக்கப்படும் அளவிலேயே தகுந்த விளைவை கொடுப்பவையாக இருக்க வேண்டும்.
சேயற்படு உணவின் ஆக்க கூறுகள்
1. நுண் உயிரிகள்
உ-ம் இலத்திரிக்கமில பகர{ரியா.
கிடைக்கும் சுக நலன்கள்
-- குடல்களில் காணப்படும் நுண்ணங்கிகளின் செயற்பாட்டை ஊக்குவித்தல்
- வயிற்றோட்டம் மலசிக்கலை குறைத்தல்
- நோயெதிர்புத்திறனை கூட்டுதல் அல்லது உறுதிபடுத்தல்
- கோலஸ்திரோல் அளவை குறைத்தல்
- குத புற்று நோய் மற்றும் நோய் விளைவிக்கும் நுண்ணங்கிகளை குறைத்தல்
கொண்டுள்ள உணவுகள்
- தயிர்-
மோர்-
யோகட்
2. நார் பொருட்கள், சமிபாடடையாத பல் சக்கரைட்டுகள்.
உ-ம் ஒலிகோ சக்கரைடடுகள் பெக்ரின்
கிடைக்கும் சுக நலன்கள்
- குடல்களில் காணப்படும் நுண்ணங்கிகளின் செயற்பாட்டை ஊக்குவித்தல்
- வயிற்றோட்டம் மலசிக்கலை குறைத்தல்
- நோயெதிர்புத்திறனை கூட்டுதல் அல்லது உறுதிபடுத்தல்
- கோலஸ்திரோல் அளவை குறைத்தல்- குத புற்று நோய் மற்றும் நோய் விளைவிக்கும் நுண்ணங்கிகளை குறைத்தல்
- கல்சியம் மக்னீசியம் குடலில் அகத்துறுஞ்சபடுவதை அதிகரித்தல் ஒஸ்ரியோபொறோசிசை குறைத்தல்ஸ
கொண்டுள்ள உணவுகள்
- மரக்கறி பழவகைகள்
3. விற்றமின்கள்
உ-ம் போலிக்கமிலம் விற்றமின் பி6 ,பி12, டி, கெ
கிடைக்கும் சுக நலன்கள்
- இதய நோய்களை குறைத்தல்
- ஒஸ்ரியோபொறோசி ஏற்படும் சந்தர்ப்பத்தை குறைத்தல்
கொண்டுள்ள உணவுகள்
போலிக்கமிலம- இலை மரக்கறிகள்
விற்றமின் பி6 - தானியங்கள் ,மரக்கறிகள், பால் ,இறைச்சி
விற்றமின் பி12 - ஈரல் ,பால் ,இறைச்சி [தாவர உணவு உண்பவர்களுக்கு பாலும் பாற் பொருட்களுமே இவ் விற்றமினை வழங்கும்]
விற்றமின் டி - முட்டை ,பால் ,மீனெண்ணெய் ,மதுவம்
விற்றமின் கெ - மரக்கறி ,பழவகைகள், தாவர எண்ணெய் வகை ,மீன் ,ஈரல்

4. கனியுப்புகள்
உ-ம் கல்சியம் ,மக்னீசியம், நாகம்
கிடைக்கும் சுக நலன்கள்
- நோயெதிர்புத்திறனை கூட்டுதல் அல்லது உறுதிபடுத்தல்
- ஒஸ்ரியோபொறோசி ஏற்படும் சந்தர்ப்பத்தை குறைத்தல்
கொண்டுள்ள உணவுகள்
இலை மரக்கறிகள் ,பால் ,இறைச்சி , ஈரல், முட்டை
5. ஒட்சியேற்ற எதிரிகள்
உ-ம் விற்றமின் ஈ ,விற்றமின் சி ,கரோட்டின், பசுந் தேயிலை[Green tea]
கிடைக்கும் சுக நலன்கள்
- புற்று நோய் ஏற்படும் சாத்தியத்தை குறைத்தல்
- டி .என் எ ஒட்சியேற்றத்தை குறைத்தல்
- முதிர்ச்சியை குறைத்தல்
கொண்டுள்ள உணவுகள்
- விற்றமின் ஈ - மரக்கறிகள் ,வித்துகளின் முளையம் ,தாவர எண்ணெய் வகை
- விற்றமின் சி - பழ வகைகள் ,மரக்கறிகள்
- கரோட்டின் - பழ வகைகள் ,இலை மரக்கறிகள் ,கரட் முட்டை ,பூசணிக்காய்
6. புரதங்கள் பெப்ரைட்டுகள் அமினோ அமிலங்கள்
உ-ம் பால் புரத முப் பெப்ரைட்டுகள்
கிடைக்கும் சுக நலன்கள்
- குருதி அழுத்தத்தை குறைத்தல்
கொண்டுள்ள உணவுகள்
- தயிர்
- மோர்
- யோகட்
7. கொழுப்பமிலங்கள்
உ-ம் ஒமேகா 3 கொழுப்பமிலம்
கிடைக்கும் சுக நலன்கள்
- இதய நோய்களை குறைத்தல்
- தோல் புற்று நோய் ஏற்படும் சாத்தியத்தை குறைத்தல்
கொண்டுள்ள உணவுகள்
- சோய அவரை எண்ணெய் நல்லெண்ணெய்
8. தாவர இரசாயனங்கள்
உ-ம் பைட்டஸ்ரரோல் ஐசொபிளேவோன்கள்
கிடைக்கும் சுக நலன்கள்
குருதி கொலஸ்திரோலை குறைத்தல்
ஓமோன்களுடன் சம்பந்தபட்ட நோய்களை சீர்ப்படுத்தல்
கொண்டுள்ள உணவுகள்
- தாவர எண்ணெய்கள்

0 Comments:

Post a Comment

<< Home