Monday, March 07, 2005

பாவிக்கப்பட்ட மின்கலங்களால் சூழல் மாசாக்கம்

ஐரொப்பா மற்றும் வளர்ந்த நாடுகளில் காணப்படும் தரப்படுத்தி கழிவு சேகரிப்பு முறையைப் பார்த்தபோது எனது சிந்தனைக்கு எமது தாயகத்தில் பாவிக்கபட்ட மின்கலங்களை வீட்டு குப்பை கிடங்கில் எறிவதும் மனகண்ணில் நிழலாடியது.
இதை எழுதவும் துண்டியது.

பல்வேறுபட்ட மின்கலங்கள் பற்றி மேலோட்டமான ஒரு பார்வை
1. மூல மின்கலங்கள்
கொண்டுள்ள இரசாயனங்கள்
துத்த நாகம் ,மங்கனீரொட்சைட்டு, பொட்டாசியம் அல்லது சோடியம்ஐதரொட்சைட்டு

2. காபன் துத்த நாக மின்கலங்கள்
கொண்டுள்ள இரசாயனங்கள்
துத்த நாகம் . மங்கனீசு, அமோனியம் குளொரைட்டு, துத்த நாக குளொரைட்டு

3. ஈய அமில மின்கலம்
கொண்டுள்ள இரசாயனங்கள்
ஈயம், ஈயவீரோட்சைட், சல்பூரிக்கமிலம்

4. இலிதியம் மின்கலங்கள்
கொண்டுள்ள இரசாயனங்கள்
இலிதியம்-மங்கனீர்ஈரொட்சைட்டு, இலிதியம் சல்பரீரொட்சைட்,
தயோனைல் குளொரைட்ää இலிதியம்

5. மக்னீசிய மின்கலங்கள்
கொண்டுள்ள இரசாயனங்கள்
மக்னீசியம், மக்னீசியம் புரொமைட், அல்லது மக்னீசியம்
பேகுளோரைட்

6. பாதரச மின்கலங்கள்
கொண்டுள்ள இரசாயனங்கள்
பாதரசம், பாதரசஈரோட்சைட், பொட்டாசியம் ஐதரொட்சைட்

7. வெள்ளி மின்கலம்
கொண்டுள்ள இரசாயனங்கள்
நாகம் , வெள்ளி குளொரைட் இலிதியம் அல்லது துத்தநாக
குளொரைட், துத்தநாக சல்பைட்

8. நிக்கல்-கட்மிய மின்கலங்கள்
கொண்டுள்ள இரசாயனங்கள்
கட்மியம், நிக்கல் ஒட்சிஐதரோட்சைட், பொட்டாசியம்
ஐதரொட்சைட்

9. வெப்ப மின்கலங்கள்
கொண்டுள்ள இரசாயனங்கள்
கல்சியம், கல்சியம் குரொமேற், இலிதியம் குளொரைட், பொட்டாசியம் குளொரைட்

இம்மின்கலவகைகளில் பாதஇரசமின்கலங்கள் தற்போது பாவனையிலரிது.
தாயகத்தில் அதிகம் பாவனையிலுள்ளது காபன் துத்த நாக மின்கலங்கள் ,ஈய அமில மின்கலம் ஆகியவையாகும்.

இவை ஆங்காங்கு தரையில் வீசப்பட்டு கிடப்பது சாதாரணம். ஆதைவிட மண் வீடுகளில் சாணியுடன் காபன் துத்த நாக மின்கலங்களை உடைத்து பெறும் கரியை கலந்து கறுப்பு நிறத்துக்காக மெழுகுவார்கள்.
அமிலமின்கலத்தை வெட்டிதிறந்து அமிலத்தை தரையிலுற்றிவிட்டு , ஈயகழிவுகளையும் வீசிஎறிந்து விட்டு கோது துவிசக்கரவண்டித்திருத்தகங்களில் காற்று ஒழுக்கு சோதிக்க பயன்படும்.

இதன் பாதிப்பை அளவிட ஒரு சிறு கணிப்பு

உதாரணத்துக்கு யாழ்குடாநாட்டில் அனைத்து இடப்பெயாவுக்கும் முன்
10 இலட்சம் பேர் இருந்தார்கள் என கொள்வோம்
ஒரு குடும்பம் சராசரி 4 உறுப்பினர்களாலானது என வைத்தால்
250000 குடும்பங்கள்
இவற்றில் பாதி எண்ணிக்கையான குடும்பங்களே மின்கலத்தை பாவிப்பதாக கொண்டால் 125000
ஒவ்வொரு குடும்பமும் இரண்டு மாதத்துக்கு ஒருசொடி மின்கலங்கள் வீதம் பவித்தால்
இரண்டு மதத்தில் 125000 சோடி மின்கலங்கள் தரைக்கு பொகபோகிறது.

ஓருவருடத்தில் கணக்கு பாருங்கள்.


அதைவிட பாதை திறந்தபின் ஒருவாரமும் பாவனைக்கு தாக்கு பிடிக்காத மலிவு மின்கலங்கள் குடாநாட்டை ஆக்கிரமித்தது வேறுகதை.

பாதிப்புகள்
இவ்விரசாயன கூறுகள் மண்ணை மசாக்கம் செய்யலாம்
மழை நீரில் கழுவி செல்லப்பட்டு நீர்நிலைகள் மாசாக்கம்
நிலத்தடி நீர்வள மாசாக்கம்
உணவுசங்கிலியுடு கடத்தபட்டு உயர்விலங்களை பாதிக்கலாம்

குடாநாடின் நில்தடி நீர்வளம்
உவர் நீர் உட்புகல்
விவசாய செய்கையால் நைத்திரேற்று மாசாக்கம்
மலசலகூட குழிகளால் மாசாக்கம் அடைவது ஏற்கனவே நிருபிக்க பட்டது.


மின்கலமாசாக்கம் இன்னும் யாரது கவனத்துக்கும் வரவில்லை.
மின்கல பாவனையை கட்டுபடுத்த முடியாது ஆனால் கண்டபடி வீசியெறியாது விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.

போருக்குள் அல்லது இப்போது இது சாத்தியமல்ல என கூறலாம். ஆனால் தாயகத்திற்கான எதிர்கால திட்டமிடலில் இது பற்றி கவனம் செலுத்தலாமில்லயா?

4 Comments:

At March 07, 2005 5:38 pm, Blogger வசந்தன்(Vasanthan) said...

போரைச் சாட்டிக் கொண்டிருக்க முடியாது. பொலித்தீன் பாவனையை விடுதலைப்புலிகள் கட்டுப்படுத்துவதைப் போல இதையும் செய்யலாம். ஆனால் எவ்வளவுக்கு எங்கட சனம் ஒத்துழைக்கும் எண்டது கேள்விக்குறி தான். பாவிக்காதே என்று தடுப்பது சுலபம். ஆனால் பாவிக்கும் பொருட்களை கழிக்கும்போது கட்டுப்படுத்துவது மிகமிகக் கடினம். மின்கலப்பாவனை தடைசெய்ய முடியாத ஒன்று. பாவனையின் பின்னான கட்டுப்பாடு தான் வேண்டும். இதை சரியான உணர்வூட்டலால் மட்டுமே செய்ய முடியும்.

 
At March 08, 2005 1:41 pm, Blogger Kangs(கங்கா) - Kangeyan Passoubady said...

சமுதாயத்திற்கு உதவும் நல்ல பதிவு இது :-)
உபயோகப் படுத்திய மின்கலங்களை பாதுகாப்பன முறையில் அழிப்பது வருங்காலத்திற்கு மிகவும் அவசியம்.

 
At March 09, 2005 1:08 am, Blogger suratha yarlvanan said...

நல்ல பதிவு. நல்ல தமிழ்.

பாவித்த மின்கலத்திற்கு ஒரு குறிப்பிட்டதொகை பணத்தை கொடுத்து கடைக்காரர்களே திரும்ப வாங்கும் ஒரு முறையை கொண்டுவந்தால் இந்தப்பிரச்சனை அடியோடு இல்லாமல் போகும்.

ஏற்கனவே பழைய பேப்பர் பித்தளை இரும்பு போன்றவைகள் இப்படியான ஒரு மீள் பிழைப்பு வழியால் மீளவும் உற்பத்திப்பொருளாகவும் சூழல் மாசிலிருந்தும் பாதுகாக்கப்படவும் செய்கின்றது.

 
At March 09, 2005 3:13 pm, Blogger ஜெயச்சந்திரன் said...

இப்படியான கழிவுகளில்.....ஈயம்....மங்கனீசு ஈரோட்சைட்டும் உணவுச்சங்கிலிமுலம் மனிதனில் செறிவாக்கமடையகூடும்...........
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி....

 

Post a Comment

<< Home