Friday, March 11, 2005

செவ்விளநீர் -விஞ்ஞானம், வர்த்தகம்

Image Hosted by ImageShack.us
Image Hosted by ImageShack.us

செவ்விளநீர் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

நிறம் - செவ்விளநீர் நிறம் என்று ஒரு நிறத்தை சுட்டுவோம்
வருத்தத்துக்க குடிப்பது......
கோயிலுக்கு அபிசேகம் செய்ய...........
நாம் குடிக்கிறோமோ இல்லையோ கோயிலுக்கு தப்பம தேடி கொடுப்போம்.

இதன் ஆங்கில பெயர் King Coconut
தாவரவியற் பெயர் Cocos nucifera Var. aurantiaca
இது இலங்கைக்கு தனித்துவமானது. ஆதாவது இலங்கையில் மட்டும் சிறப்காக காணப்படுகிறது.

தற்போதய உலகில் செயற்கை குளிர் பாகங்களின் நிறப்பொருட்கள் இரசாயன சேர்க்கைகள் காரணமாக இயற்கை குடிபானங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுவரும் சூழ்நிலையில் செவ்விளநீர் பற்றி பார்ப்பது பொருத்தமானது என கருதுகிறேன்.

குரும்பை பிடித்ததிலிருந்து 6-8 மாத பருவமுடைய இளம் பருவம் இளநீர் பருவமாகும.;
இளநீரின் போசணை பெறுமதி

நீர் 95.5%
புரதம் 0.1%
கோழுப்பு 0.1%
கனியுப்புகள் 0.4%
காபோவைதரேற்றுகள் 4.0%

அத்துடன் இளநீரில் காணப்படும் சில சுயாதீன அமினோ அமிலங்களின் அளவு பசுப்பாலில் காணப்படுவதிலும் அதிகமாகும். அத்துடன் விற்றமின் சி விற்றமின் பி கூட்டம் என்பனவும் குறிப்பிடத்தக்க அளவில் காணப்படுகிறது.

பயன்கள்
இளநீர் இயற்கையாகவே கிருமி தொற்று அற்று இருப்பதால் குளுக்கோசு கரைசலுக்கு பதிலாக நோயாளிகளுக்கு செலுத்த முடியுமாம். அவ்வாறு இரண்டாம் உலக யுத்த காலத்தில் பயன்பட்டதாக கூறப்படுகிறது.

குடலில் காணப்படும் குடற் புழக்கள் வயிற்றோட்டம் என்பவற்றுக்கு நிவாரணமாக

வாந்தியை கட்டுப்படுத்த

அம்மை நோய்களின் வீரியம் அல்லது அதன் தாக்கத்தை குறைக்க

இதில் பொட்டாசியம் அதிகளவு காணப்படுவதால் சிறுநீர் போக்கு அதிகரிக்கும்.

சிறுநீரகத்தில் ஏற்படும் கனியுப்பு நஞ்சாக்கத்தை குறைத்தல்

குழந்தைகள் நோயாளிகளுக்கான ஊட்ட பானமாகும்

முட்டை வெண்கருவுடன் கலந்து செயற்கை முறை சினைப்படுத்தலுக்கான விந்து ஐதாக்கியாக.

தாவர ஓமொன்கள் காணப்படுவதால் இழையவளர்ப்பு ஊடகத்திற்கு

நொதிக்கப்பட்ட இளநீரிலிருந்து நேரா டீ கொகோ எனும்

நொதித்தலுக்குட்படுத்தப்பட்ட குடி பானம் தயாரிப்பு.
தகரத்திலடைத்த இளநீர்


இலங்கையிலிருந்து பல்லாயிரக்கணக்கான இளநீர் வருடாந்தம் ஏற்றுமதியாகிறது.

எமது புலத்தமிழர்கள் பல்வேறு தொழில் முயற்சியிலும் ஈடுபடுகிறனர். அவர்கள் செவ்விளநீர் ஏற்று மதியிலும் ஈடுபடலாமே.
இங்கு செவ்விளநீர் ஏற்றுமதி என்பது தகரத்திலடைத்ததை அல்ல முழமையான இளநீரையே சுட்டுகிறேன்
ஏற்றுமதி செய்வதற்கு அதற்கான தொழில்நுட்பத்தை பயன் படுத்துவது அத்தியாவசியமானது.
சரியான பருவத்தில் பிடுங்குதல் அல்லது அறுவடை செய்தல்.
சரியான முறையில் பரிகரிப்புக்குட்படுத்தல் அதாவது இளநீரின் தோல் நீரிழப்பால் சுருக்கமடையாது இருக்க தகுந்த பதுகாப்பு செய்தல்- மெழுகுப் பூச்சிடல் பொலிதீன் சுருளிடல் போன்றவை.

போதியிடல்.
தகுந்த வெப்பநிலை ஈரப்பதன் என்பவற்றை கொள்கலனில் பேணூதல்

என்பவை மிகமுக்கியமானவை.

மெழுகு பூச்சு புலத்தில் மரவள்ளி கிழங்கு வேண்டியோருக்கு தெரிந்திருக்கும். இதுகும் அது பொனறது. ஆனால் இளநீருக்கு தனித்துவமாது.

இவற்றிகுரிய தனித்துவமான தகவல்களை அதாவது வெப்பநிலை மெழுகு கலவை போன்றவற்றை பகிர்ந்து கொள்ளமுடியாது.

இதைபற்றி இலங்கையில் உள்ள ஒரு ஆராய்ச்சி நிறுவனம் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அங்கிருந்து பெற்றுக்கொள்ளமுடியும்.

மேலை நாடுகளில் செயற்கையில் களைத்து இயற்கையை நாட எம் தாயகத்தில் இயற்கையை புறந்தள்ளி கோலாக்களில் முழ்கிகோண்டிருக்கிறோம்.

6 Comments:

At March 11, 2005 9:03 pm, Blogger Thangamani said...

இதுமாதிரியான பதிவுகள் மிகவும் நல்லன. தமிழ் இலக்கிய மொழி என்பதைக் கடந்து பயன் தருமொழியாக இவைகள் அவசியம். நன்றி. தொடர்ந்து எழுதுங்கள்.

 
At March 11, 2005 9:16 pm, Blogger வன்னியன் said...

இளநீரை சேலைனுக்குப் பதிலாக பயன்படுத்தலாம். வன்னியில் அப்படி நடந்துள்ளது. அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் மருந்துத் தடை காரணமாக ஏற்பட்ட சிக்கலை இது தீர்த்து வைத்தது. இத்தகவல் பலருக்குப் புதியதாக இருக்கலாம்.

 
At March 11, 2005 9:42 pm, Blogger ஒரு பொடிச்சி said...

எளிய நல்ல தமிழ், உங்கள் தளத்தில் ஒலித்த பாடலும். தொடர்ந்து எழுதுங்கள்.

 
At March 11, 2005 11:19 pm, Blogger -/பெயரிலி. said...

தொடர்ந்து எழுதுங்கள்

 
At October 21, 2007 11:42 pm, Blogger Unknown said...

Good and Interesting information.
Keep posting.

Thank you.
Maria Kumar

 
At October 22, 2007 10:03 am, Anonymous Anonymous said...

Write More.

 

Post a Comment

<< Home