Monday, January 09, 2006

French fry பிரியர்களுக்கு ஒரு தகவல்

உணவு தயாரிப்பின் போது உடலுக்கு பல பாதகமான பதார்த்தங்கள் உருவாகுவது கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் French fry தயாரிக்கும் போது அக்கிரலமைட் எனும் பதார்த்தம் உருவாகிறது. அதைபற்றி சிறிது பார்ப்போம்.

Image Hosted by ImageShack.us

Acrylamide அக்கிரலமைட் எனப்படுவது ஒரு மணமற்ற,வெண்மையான அறைவெப்பநிலையில் திண்மமாக காணப்படும் ஒரு பதார்த்தமாகும். இதன்
மூலக்கூற்று சூத்திரம்- C3H5NO
மூலக்கூற்று நிறை -71.08.
இதன் பல்பகுதியமானது
நீர் பரிகரிப்ப- Water treatment
எண்ணெய் பிரித்தெடுப்பு- Enhanced oil recovery
வீழ்படிவாக்கி- Flocullant
கழிவுபொருட்களின் பரிகரிப்பு - Sewage and waste water treatment ;......
ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது.
அண்மைய காலங்களில் இது உணவிலும் காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. (Swedish National Food Administration, 2002)

உணவில் அக்கிரலமைட் உருவாகும் முறை
இது Maillard-reaction எனும் தாக்கத்தின் பக்கவிளைபொருளாக உருவகிறது

[Maillard-reaction -இது உணவில் காணப்படும் அமினோ அமிலங்களுக்கும்/புரதகூறுகளுக்கும், தாழ்த்தும் வெல்லங்களுக்கும் (Reducing sugars) இடையே உணவு பரிகரிப்பின் போது நிகழும் தாக்கமாகும் ]


உணவை >120 °C வெப்பநிலையில் தயாரிக்கும் போதுகுறிப்பாக asparagin எனும் அமினோ அமிலத்துக்கும் தாழ்த்தும் வெல்லங்களுக்கும் இடையேயான தாக்கத்தால் அக்கிரலமைட் உருவாகிறது.

உணவில் இதன் உருவாக்கத்தில்/ செல்வாக்கு செலுத்தும் காரணிகளாவன:
1.உணவு தயாரிக்கும் வெப்பநிலை
2.உணவு தயாரிக்க எடுக்கும் நேரம்
3. தாழ்த்தும் வெல்லங்கள்
4.அஸ்பராஜீன்-asparagin [இது உருளைகிழங்கில் அதிகம் காணப்படுகிறது]

இது அதிகளவில் காணப்படக்கூடிய உணவுகளாவன:

–French fries
–Potato chips
–Cakes, bread, cookies



Image Hosted by ImageShack.us

French fry [உருளைகிழங்கு பொரியல் :-) ] தயாரிக்கப்படும் வெப்பநிலை பொதுவாக 160-180 டிகிரி செல்சியஸ் ஆகும்.
அத்துடன் உருளைகிழங்கு அதிகளவு அஸ்பரஜீனையும், குறிப்பிட்ட சில காலங்களில் அதிகளவான தாழ்த்தும் வெல்லங்களையும் கொண்டிருக்கும்.
இதனால் அக்ரிலமைட் French fry இல் உருவாகுவதற்கான சாத்தியங்கள் அதிகமாகும்.
உடலில் அகத்துறுஞ்சப்படும் முறை:
உணவுகால்வாய், சுவாசம் தொகுதி, தோலினூடு அகத்துறுஞ்சப்படக்கூடியது.
இதன் நச்சுத்தன்மை
Neurotoxic -நரம்புதொகுயில்

–குறுகியகாலத்திற்கு உள்ளெடுக்கப்படும் போது-பலவீனமான கால்கள்,கைகளில் தோல் உரிதல்
–நீண்டநாட்களுக்கு உள்ளெடுக்கப்படும் போது-cerebellar disfunction, neuropathy
Reproductive toxicity இனப்பெருக்க தொகுதியில்

–எலிகளிலும் சுண்டெலிகளிலும் விந்துகளில் விகாரங்கள் ஏற்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.

Carcinogenic- புற்றுநோய்
–எலிகளிலும், சுண்டெலிகளிலும் புற்றுநோய் ஏற்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.
மனிதனிலும் ஏற்படக்கூடிய சாத்தியம் உண்டு.

நாளாந்தம் உள்ளெடுக்கப்பட்கூடிய அக்கிடலமைட் அளவு
•0. 2 µg/kg per day

24 Comments:

At January 09, 2006 7:06 am, Blogger G.Ragavan said...

அப்ப நாக்குக்கு ருசியா ஒன்னுமே திங்கக் கூடாது. பேசாம காய்கனி கெழங்குன்னு போக வேண்டியதுதானா!

 
At January 09, 2006 7:19 am, Blogger வானம்பாடி said...

:-O, தகவலுக்கு நன்றி. இதையெல்லாம் மண்டைக்குள்ளே போட்டாலும் இந்த நாக்கு அடங்க மாட்டேங்குதே

 
At January 09, 2006 7:21 am, Blogger ஜெயச்சந்திரன் said...

This comment has been removed by a blog administrator.

 
At January 09, 2006 7:25 am, Blogger ஜெயச்சந்திரன் said...

நன்றி ராகவன், சுதர்சன்.

ராகவன் என்ன செய்வது இதை இப்போது தான் சொல்கிறார்கள், இவ்வளவு நாளும் மக்கள் உண்ணவே இல்லையா?
இப்போது உணவுகளில் அக்கிரலமைட் உருவகுவ்தை தடுப்பது/ இயன்றவரை குறைப்பது என்பதில் பல ஆராய்ச்சிகள் நடைபெற்றுகொண்டிருக்கிறன.....


நானும் அதற்காக சாப்பிடாது ஒதுக்கவில்லை. :-)

 
At January 09, 2006 9:37 am, Anonymous Anonymous said...

have featured this in desipundit.
hope you dont mind :)

http://www.desipundit.com/2006/01/09/2589/

 
At January 09, 2006 11:26 am, Anonymous Anonymous said...

டுபுக்கு உங்கள் வருகைக்கு நன்றி.....
உங்கள் அறிமுகத்துக்கு ம் சேர்த்து :-)

 
At January 09, 2006 12:47 pm, Anonymous Anonymous said...

that was a good scientific article in tamil. but this was one of the head turners a few years back in the major news channels in europe and US. the study was conducted by a swiss group, i think. before considering the acrylamide in french fries- it has not been shown conclusively that acrylamide can cause cancer in humans. it may cause cancer in a certain type of lab rats after feeding a a enormous amount of acrylamide. more over theoritically acrylamide can form in all the stuff that undergoes maillard reaction- as you had pointed out, its basically a reaction between sugars and aminoacids (more particularly asparagine) at high temperature. maillard reaction occurs in a lot of foods- mainly in breads and all kinds of roasted foods because- the roasted brown clour is due to maillard reaction. so all of these foods have some acrylamide. நம்ம தோசையில் கூட இருக்கலாம்! but the level of acrylamide is the question , it is present in very low level that even if it causes cancer, we might have to eat tons and tons of french fries, where the fat will kill you before the acrylamide can even think of causing cancer . so lets be happy for now and eat lot of french fries!!!!
எண்ணையில் வறுக்காட்டா என்னங்க சுவை இருக்கு??!!!!!!!! :)

 
At January 09, 2006 1:00 pm, Blogger SnackDragon said...

இதை என் பதிவிலும் இட்டுள்ளேன். எல்லோரும் வாசிக்க கடவது.
நன்றி.

 
At January 09, 2006 1:04 pm, Anonymous Anonymous said...

பண்டாரம்??// எனுங்க உங்க பெயரில் எழுதினா உங்களை வந்து பிடிச்சுடுவேனா???
நம்மோட உண்வுகளில் யாருங்க ஆராய்ச்சி செய்யிறாங்க.
அதான் ஒரு பட்டியலே இணைச்சிருக்கேன். என்ன எழுத்து கொஞ்சம் சின்னனா போயிடிச்சோ??
நாம இருக்கிற நாட்டிலை french fry ஐ தான் முக்கிய உணவு அதால அதிலை என்னமோ பண்ணிகிட்டிருக்காங்க............

 
At January 09, 2006 1:22 pm, Anonymous Anonymous said...

பெயரில் என்னங்க இருக்கு? எதொவொரு அடையாளம்......அதெல்லாம் கண்டுக்காதீங்க!

 
At January 09, 2006 1:26 pm, Anonymous Anonymous said...

சரி அப்படியே ஆகட்டும் பண்டாரம் :-)....... நன்றி

கார்த்திக் நன்றி

 
At January 16, 2006 5:35 pm, Anonymous Anonymous said...

test test test

 
At January 16, 2006 5:35 pm, Anonymous Anonymous said...

test test test

 
At January 17, 2006 5:32 am, Blogger பிரதீப் said...

நான் எதையாச்சும் கொஞ்சம் விரும்பித் தின்னுட்டாப் போதும், அதுக்கு ஆண்டவன் ஒரு பெரிய ஆப்பா வச்சிருவான் :-(

சீக்கிரம் எப்படியாச்சும் இதுக்கு ஒரு மாத்து கண்டு புடிச்சிரணும்யா. என்னமோ போங்க ஸார், உங்க தகவலுக்கு நன்றி...

ராகவன் சொன்ன மாதிரி காய் கனி கெழங்குதான், என்ன... அந்தக் கெழங்கைக் கொஞ்சமாப் பொரிச்சுத் திங்க விடுறாய்ங்களா?

 
At January 17, 2006 8:42 am, Anonymous Anonymous said...

This comment has been removed by a blog administrator.

 
At January 17, 2006 8:44 am, Blogger ஜெயச்சந்திரன் said...

பிரதீப் நன்றி.
ஏதோ நிச்சயம் கண்டு பிடிப்பார்கள். அதான் இங்க பிரதான உணவாச்சே

 
At May 05, 2006 10:10 pm, Anonymous Anonymous said...

home equity

 
At September 26, 2006 2:02 am, Blogger பாரதிய நவீன இளவரசன் said...

பதிவுக்கு ரொம்ப நன்றி; அதிகம் ருசித்து சாப்பிடும் இந்த உணவை, ஆரோக்கிய நலன் கருதி இனி குறைத்துக் கொள்ளவேண்டியதுதான்.

எப்போதாவது ஒரு சமயம் (மாதம் ஒருமுறையோ, இரண்டு மாதத்தில் ஒருமுறையோ?) சாப்பிட்டால், பிரச்சினை இருக்காது என நினைக்கிறேன்.

 
At September 26, 2006 4:15 am, Blogger ஜெயச்சந்திரன் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Bharateeyamodernprince

 
At September 26, 2006 5:05 am, Blogger கசி said...

எனக்கும் ரொம்ப பிடிக்கும் ப்ரெஞ்சு ப்ரை.

என் புருஷனுக்கு புடிச்சது டட்ச் ட்ரீட். அதிலும் ஓசி போண்டா என்றால் கொள்ளை ஆசைதான் போங்க.

 
At September 26, 2006 5:06 am, Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சே!
சுவைக்குச் சாப்பிடுவதைத் தவிர்த்து பசிக்குச் சாப்பிடுவதுடன்;நீராவியில் அவித்த காய்கறி;40 க்கு மேல் அளவான மாமிசம்; உடல்பயிற்ச்சி குறிப்பாக நடத்தல்.ஓரளவுக்காவது நோய்களைத் தவிர்க்க உதவுமென ;என் வைத்தியர் எனக்குக் கூறினார்.
யோகன் பாரிஸ்

 
At September 26, 2006 6:24 am, Blogger ஜெயச்சந்திரன் said...

யோகன் பரிஸ், மற்றும் ராதா ராகவன் உங்கள் இருவரது வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

 
At September 26, 2006 6:34 am, Blogger துளசி கோபால் said...

ப்ரெஞ்சு ப்ரைஸ்லெ

ஷூ ஸ்ட்ரிங்ஸ்ன்னு மெலீசா வருது இல்லை அதெல்லாம் கூட நல்லது இல்லையாம்.

துண்டம் மெல்லீசா ஆகஆக எண்ணெய் வேறு அதிகம் எடுக்குமாம்.
அதுனாலெ ஜாக்கெட்டோட பொடேடோ தின்னுங்க.:-)

ப்ரைஸ் இப்போ தோலோட துண்டுபோட்டு ( தோளொடு துண்டும் போட்டோ?) வருதுல்லெ
அதை, ச்சும்மா அவன்லெ வச்சுப் சுட்டுத் தின்னுங்க.

பாக்கெட்லே பின்னாலெ பாருங்க. வெறும் எண்ணெய் சேர்த்ததாப் பார்த்து வாங்குங்க.

 
At September 26, 2006 8:29 am, Blogger ஜெயச்சந்திரன் said...

துளசி டீச்சர் :) (அப்படி தானே பலரும் கூப்பிடுறாங்க)
உங்க ஆலோசனைக்கும், வருகைக்கும் நன்றி.

 

Post a Comment

<< Home