Sunday, June 26, 2005

வலைப்பதிவாளர்களுக்கு உடல் நலன் சார் எச்சரிக்கை.

பலவேறு நாடுகளில் இதுவரை வலைப்பதிவாளர் மாநாடுகள் நடைபெற்று முடிந்துள்ளன. அவற்றில் பங்குபற்றியோர் படமும் காட்டியிருந்தனர். அவர்களில் குறிப்பிட்ட சதவிகிதத்தினரது உடல் நிறை அதிகமாக இருக்கும் போல் தோன்றுகிறது.

அவுஸ்திரேலிய மாநாட்டில் கலந்துகொண்டோரில் சுமார் 50% (கலந்துகொண்டதே 2 பேர் தானே)
அமெரிகா ஐக்கிய நாடுகளில் கலந்துகோண்டோரில் கிட்டதிதட்ட 20%
கனடா மாநட்டில் கலந்துகொண்டொரில் 30%
சிங்கபூர், மற்றும் சென்னை மாநாட்டு படங்கள் பார்க்க கிடைக்கவில்லை.

அதிகரித்த உடல் நிறை உடனடியாக பெரிய பிரச்சனையை கொடுக்காவிட்டாலும் காலப்போக்கில் அது பிரச்சனைக்குரியதாக மாறலாம்.
நீரிழிவு
உயர் குருதியழுத்தம்
என்பவை ஏற்பட காரணமாகலாம்.

எனவெ உங்கள் உயரத்துடன் ஒப்பிட்டு உங்கள் நிறை எவ்வாறு இருப்பது விரும்பத்தக்கது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
இதற்காக பயன்படுவது

உடல் திணிவு சுட்டி = உடல் நிறை(kg)/ (உயரம் (m))^2



Image Hosted by ImageShack.us



உதாரணமாக ஒருவருடத்தில் 1000, 000 கிலோகலோரி உணவு உள்ளெடுகிறீர்கள் என வைத்தல். அதில் 1% மான சக்தி உங்கள் உடலில் சேமிக்கப்பட்டால் உங்கள் வருடந்திர நிறை அதிகரிப்பு 1.2-1.7 கிலோகிராம் ஆக இருக்கும். இதேவேகத்தில் போனால் 10 வருடத்தில் 17 கிலோகிராம் நிறைஅதிகரிப்பு உங்கள் உடல் நலனை சீர் குலைக்க போதுமானதாக இருக்கும்.

ஆகவே அனைத்துவலைப்பதிவாளர்களும் தமது உடல் நலனில் அக்கறை எடுத்துகொள்ளுமாறு வேண்டப்படுகிறீர்கள்.

குறிப்பு:
முதலில் இட்ட பதிவு காணமல் போய்விட்டதால் மீள இடப்படுகிறது

17 Comments:

At June 26, 2005 5:43 pm, Anonymous Anonymous said...

This comment has been removed by a blog administrator.

 
At June 27, 2005 1:02 am, Blogger tamil said...

போதிய உடற்பயிற்சி இல்லாமைதான் உடல் எடை கூடுவதற்க்கு காரணமாக அமைகின்றது. உழைக்க வேண்டும் பணம் ஈட்ட வேண்டும் என்ற எண்ணம் இருக்குமளவுக்கு உடல்நலனை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பது குறைவுதான் கூடவே நான் உட்படத்தான்.

 
At June 27, 2005 2:31 am, Anonymous Anonymous said...

This comment has been removed by a blog administrator.

 
At June 27, 2005 3:01 am, Anonymous Anonymous said...

This comment has been removed by a blog administrator.

 
At June 27, 2005 3:06 am, Anonymous Anonymous said...

//போதிய உடற்பயிற்சி இல்லாமைதான் உடல் எடை கூடுவதற்க்கு காரணமாக அமைகின்றது. உழைக்க வேண்டும் பணம் ஈட்ட வேண்டும் என்ற எண்ணம் இருக்குமளவுக்கு உடல்நலனை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பது குறைவுதான் கூடவே நான் உட்படத்தான்.//

சண்முகி அக்கா நன்றி. தங்கள் கருத்து சரியானதே. உடற் பயிற்சி இன்மை முக்கிய காரணம். விரிவாக இதைப்பற்றி எழுத விருப்பம் தற்போது நேரம் கொஞ்சம் போதவில்லை. ஆறுதலாக அமர்ந்து எழுதவேண்டும்.

 
At June 27, 2005 4:36 am, Anonymous Anonymous said...

This comment has been removed by a blog administrator.

 
At June 28, 2005 5:56 am, Anonymous Anonymous said...

இவ்விணைப்பில் போய் நீங்களே இலகுவாக உடல் திணிவு சுட்டியை கணிக்கலாம்
http://www.healthyliving.gov.uk/howhealthy/index.cfm?contentid=1385

சுட்டிக்கு நன்றி மதன்

 
At June 28, 2005 7:42 am, Blogger Chandravathanaa said...

ஒரு கை கொடுத்திருக்கிறேன்

 
At June 28, 2005 2:07 pm, Anonymous Anonymous said...

நன்றி அக்கா......

 
At June 29, 2005 4:38 am, Blogger ஜெயச்சந்திரன் said...

This comment has been removed by a blog administrator.

 
At June 29, 2005 4:40 am, Blogger ஜெயச்சந்திரன் said...

பெடியன்கள் தாம் எமது பதிவில் பின்னூட்டம் இடவில்லை என சொல்லியுளதால் அவர்களது பெயரில் வந்த பின்னூட்டமும் அது சார்பாக வந்த அனைத்து பின்னூட்டங்களும் நீக்கப்படுகிறது.

தயவிசெய்து அனாமதேயமாக பின்னூட்டம் இடுவோர் பிறரது பெயரை பயன்படுத்த வேண்டாம் என கேட்கிறோம்.

 
At September 04, 2005 8:31 pm, Blogger துளசி கோபால் said...

//சிங்கபூர், மற்றும் சென்னை மாநாட்டு படங்கள் பார்க்க கிடைக்கவில்லை//

நல்லவேளை, தப்பிச்சேன்!

நல்ல பதிவு. இனிமேப்பட்டு தினம் கொஞ்சம் நடக்கத்தான் வேணும்!

ரொம்பநாள் கழிச்சு பின்னூட்டம் போடறதுக்கு ஒரு மன்னிப்பு?

 
At September 28, 2005 2:03 am, Blogger NambikkaiRAMA said...

தகவலை அறியச்செய்தமைக்கு மிக்க நன்றி அன்பரே!

 
At September 28, 2005 2:10 am, Blogger NambikkaiRAMA said...

உடல் திணிவு = உடல் நிறை/(உயரம்X 2) என்பதுதானா?

இதில் உயரம், நிறையின் அலகு (unit) என்ன என்பதையும் சொல்லுங்களேன்.

 
At September 28, 2005 10:43 am, Anonymous Anonymous said...

//உடல் திணிவு = உடல் நிறை/(உயரம்X 2) என்பதுதானா//
உடல் திணிவு அல்ல நண்பரே அது உடல் திணிவு சுட்டி [Body Mass Index]

அலகு போட மறந்துவிட்டேன். சுட்டிகாட்டியதற்கு நன்றி. அது M [மீற்றர்] என்று வரவேண்டும்

 
At September 28, 2005 10:45 am, Anonymous Anonymous said...

உயரம் x 2 அல்ல உயரத்தின் வர்க்கம் அல்லது இரண்டாம் அடுக்கு.

 
At September 28, 2005 10:47 am, Blogger ஜெயச்சந்திரன் said...

துளசி அக்கா நன்றி. ரொம்ப நாள் கழிச்சு நன்றி சொல்லிறதுக்கு ஒரு மன்னிப்பு :))

 

Post a Comment

<< Home