காட்டு முயல் பார்த்தீர்களா
இதில் பாருங்கள் மூன்று முயல்கள் புல் மேய்ந்து கொண்டிருக்கிறன. நம்ம ஊரிலும் இவ்வாறான முயல்கள் இருக்கிறன. ஆனால் மனிதருடைய அசுமாத்தம் கண்டதும் பாய்ந்தோடி ஒளித்துவிடும். நம்ம ஆக்களும் விடுவாங்களா கொட்டனும் வேட்டைநாயுமாக திரிந்து முயல் வேட்டை ஆடுவதில் வீரர்கள். அதனால் தான் போலும் அவை சிறு அசுமாத்தம் கண்டதும் ஓடி ஒளிக்கிறன. ஆனால் இங்கு நாமிருக்கும் பகுதியில் தெருக்கரையோரம் சாதாரணமாக இருக்கும். மனித காலடி ஓசையை கேட்டு ஓடுவதில்லை. அதாவது இங்கு யாரும் அவற்றிற்கு தீங்கு செய்வதில்லை என நினைக்கிறேன்.ஏன் நாங்கள் மட்டும் நமது இயற்கை வளத்தை கவனமற்று அழிக்க முற்படுகிறோம்?நம்ம மக்களுக்கு சூழலியல் விழிப்ர்ணர்ச்சி போதாதா?
ஆனால் இதே காட்டு முயல்கள் அளவுக்கதிகமாக பெருகி அவற்றினால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவற்றை கட்டுப்படுத்த அவுஸ்திரேலியாவில் முயன்றதாக இணையத்தில் கட்டுரைகள் இருக்கிறன.
5 Comments:
ஓம்..இற்கு மெல்பேணில் நாங்கள் பெடியள் பின்னேரங்களில் முயல் கலைக்க போறனாங்கள். போறது மட்டும் தான். பெரிய எததிர்பார்ப்போடு தான் போறது.. ஆனால் இது வரையும் எதுவும் அம்பிட்டதில்ல. எல்லா பெடியளும் சேர்ந்து அப்பிடி போறது ஒரு பம்பல். அவ்வளவும் தான். கண்ணுக்குள்ளை லைற் அடிக்க அப்பிடியே ஆடாமல் அசையாமல் நிக்குங்கள். கிட்ட நெருங்க சும்மா பாய்ந்து ஓடுங்கள். ஒஸ்ரேலியாவில இது அனுமதிக்கப் படுகிறது. முயல் பிடிக்கிறதுக்காகவே கடைகளில் உபகரணங்கள் விற்குது.
சயந்தன் நன்றி. இணையத்தில் இவை அங்கு பெருந்தொல்லை கொடுப்பதாக தான் எழுதியுள்ளார்கள்.
இங்கு கலை எழுந்து ஜன்னல் திரையை நிக்கினால் பெரும்பாலும் ஒவ்வொரு நாளும் புல்மேயும் முயல்களை காணலாம்.
கிட்ட பிடிக்க போனால் அவையும் ஓடும் தான். ஆனால் நம்மூரில் சிறு சரசரப்பு கேட்டாலே முயல் ஓடி ஓளித்துவிடும்
காட்டான்!
(பதிவுக்கேற்ற மாதிரி பேர்)
நல்லாயிருக்கு பதிவும் படமும்.
This comment has been removed by a blog administrator.
நன்றி சாந்தி அக்கா
Post a Comment
<< Home