நன்றி தினமலர்.............
நீண்ட நாட்களாக எனது வலைப்பதிவை கவனிக்காது இருந்துவிட்டேன். அந்த காலப்பகுதிக்குள் தினமலரில் (3/10/2005)எனது வலைப்பதிவைப்பற்றி அறிமுகம் செய்திருந்ததை அவதானிக்கமுடியாது போய்விட்டது. அண்மையில் திரு. சரவணனும், துளசி அக்காவின் பின்னூட்டத்தை பார்த்துதான் தெரிந்துகொண்டேன் எனது பதிவு பற்றி தினமலரில் குறிப்பு வந்திருக்கிறது என்பதை. பின்னூட்டம் இடும் நேரம் மட்டுமே தெரியும் படி எனது வலைப்பூ ஒழுங்கமைப்பு இருந்ததால் எந்த திகதியில் சரவணனும், துளசி அக்காவும் பின்னூட்டம் இட்டனர் எனவும் உடனே பார்க்கவில்லை. இது தொடர்பாக சரவணனிடம் கேட்டு மின்னஞ்சல் போட்டிருந்தேன். அவரும் சுகவீனம் காரணமாக நீண்ட நாட்கள் பதிலிடமுடியாது இன்று தான் பதிலிட்டிருந்தார். அதன் பின் தான் எனது வலைப்பூவின் பின்னுட்ட அமைப்பில் திகதியும் தெரியும்படி மாற்றிஅமைத்து பார்த்தபோது தெரிந்தது தினமலரின் அறிமுகம் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன் வந்திருந்தது என்பது.
இன்று தான் தினமலரின் அன்றைய திகதிய பதிப்பை வசித்தேன்.
எனது வலைப்பூ பற்றி அறிமுகப்படுத்திய தினமலர் ஆசிரியர் குழுவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
அதை வாசித்து எனக்கு அறியத்தந்த திரு. சரவணன், துளசி அக்கவிற்கும் நன்றிகள்.
6 Comments:
வாழ்த்துகள்.
congradulations
வாழ்த்துக்கள் நண்பரே.
வாழ்த்துகள் நண்பரே.
வாழ்த்துகள் நண்பரே
உங்கள் வாழ்த்துக்கு நன்றி நண்பர்களே.
Post a Comment
<< Home