கண்மூடி கடலை போடுவோருக்கு......
நிலக்கடலை/கச்சானை கண்ணை மூடிகொண்டு உடைத்து வாயில் போடுவோர் கவனமாக இருக்க வேண்டும்.
நிலக்கடலை அதிகளவில எண்ணெய் உற்பத்திக்காகவும், பதப்படுத்தப்பட்ட கடலையாகவும் உண்ணப்படுகிறது.
நிலக்கடலை இலகுவில் Aspergillus flavus எனும் பூஞ்சண தொற்றுக்கு உள்ளாககூடியது. இப்பூசணமானது தனது அனுசேபச்செயற்பாட்டின் போது சில நச்சு பதார்த்தங்களை உருவாக்குகிறது. அதனை aflatoxin என அழைப்பார்.
நிலக்கடலையை தவிர
சோளம் (Maize)
நெல்/அரிசி
மஞ்சள்,
மிளகு
தேங்காய்/கொப்பறா
சூரியகாந்தி
பாலும், பாற் பொருட்களிலும் காணப்படலாம்.
இந்நச்சு பொருள் ஆனது
மனிதரில் விரும்பந்தகாத பாதிப்புகள்/நோய்களை ஏற்படுத்த வல்லது.
1. குறிப்பாக ஈரலில் (liver)புற்றுநோயை ஏற்படுத்தும் வல்லமை மிக்கது. ஏனைய பகுதிகளிலும் புற்றுநோயைஏற்படுத்த முடியும்
2. மஞ்சள் காமலையை ஏற்படுத்தும் ஹெப்பரைரிஸ் வைரசின் வீரியத்தை/ தாக்கத்தை அதிகரிக்கச்செய்யும்.
3.சிறுவர்களில் வளர்ச்சியை பாதிப்பதாக அறியப்பட்டுள்ளது. குறிப்பாக ஆபிரிக்கவிலும்,இந்தியாவில் childhood cirrhosis ஐ ஏற்படுத்துவதாகவும் அறியப்பட்டுள்ளது.
3. விலங்குகளுக்கு இந்நஞ்சுகலப்புள்ள உணவுகளை கொடுப்பதால் விலங்குகளில் வளர்ச்சிபாதிக்கப்டுவதுடன் கோழிகளில் முட்டை உற்பத்தி பாதிக்கபடுகிறது. பால்மாடுக்கு உணவாக கொடுக்கப்படும் போது பால் மூலம் சுரக்கபட்டு மனிதரை அடையும் சாத்தியம் உண்டு.
நிலக்கடலையில் எப்போதும் தொற்று ஏற்படும் என சொல்லமுடியாது. அதே போல ஒரு மூடையில் உள்ள எல்லா கடலைகளும் பாதிக்கப்ப்ட்டிருக்கும் என்றும் சொல்ல முடியாது.
அறுவடையின் போது சேதமடைந்த கடலைகள்
சேமிப்பின் போது ஈரலிப்பான நிலை இருத்தல்
போதுமான அளவுக்கு உலர்த்ததுவிடுதல்
அதிக முதிச்ச்சியடைந்த / குறை முதிர்ச்சியடைந்த நிலையில் அறுவடை செய்யப்படல்
போறவை இதன் தொற்றை அதிகரிக்க செய்யலாம்.
நிலக்கடலையை 120 பாகை செல்சியசில் சூடக்கும் போது பெருமளவு நச்சு பதார்த்தம் அழிவடைவது அவதானிக்கப்பட்டுள்ளது.
எந்த வித வெப்ப பரிகரிப்பும் இல்லாது உண்ணும் போதோ அல்லது அவித்து உண்ணும் போதோ இந்நஞ்சு பதார்த்தம் மனிதரை அடைய சாத்தியம் உண்டு.
கடலையை உடைத்து அதை வடிவாக பாத்துவிட்டு உண்ணுவோர் பூஞ்சணத்தால் தொற்று ஏற்பட்ட கடலைகளை அவதானிக்கமுடியும், அவ்வாறு இல்லாது கடலையை உடைத்து வாய்க்குள் போடுவோர் வரும் காலத்தில் சற்று அவதானமாக இருங்கள்.
4 Comments:
அப்படியா விஷயம், தகவலுக்கு நன்றி!
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜீவா
ஆஹா.. நம்மல பத்தி ஏதோ சொல்லியிருக்காங்களேன்னு ரொம்ப ஆர்வத்தொட வந்தேன். அது பொய்த்துப்போனாலும், பயனுள்ள தகவல் அறிந்தேன். நன்றி.
நட்புடன்,
அருள்.
அருள்குமார் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.......
எல்லாரும் பரபரப்பா தலைப்பு வைக்கிறாங்களே என்று வைத்து பார்த்தேன்
Post a Comment
<< Home