Monday, September 25, 2006

பரிசாகத் தரப்பட்ட நிலம் : உணவுக்கு இரந்து நிற்கிறது.

ஒரு பாடலுக்குப் பரிசாகத் தரப்பட்ட நிலம் : உணவுக்கு இரந்து நிற்கிறது.

யாழ்குடாநாட்டின் கழுத்துக்கள் இறுக்கப்பட்டு மூச்சு திணறி கொண்டிருக்கிறது. எட்டு லட்சத்திற்கு மேற்பட்ட மக்களை 1980 களில் கொண்டிருந்த பிரதேசம் இன்று அதனிலும் பாதிக்கும் குறைவான மக்களுக்கே உணவின்றி தவித்துகொண்டிருக்கிறது. உணவு கையிருப்பு போதாது, மக்கள் அவலத்தை எதிர் கொள்கிறார்கள் என செஞ்சிலுவை சங்கம், ஐநா அமைப்பு, அங்கிருக்கும் அரச பிரதிநிதியான அரச அதிபர் ஆகியோர் சொல்லி கொண்டிருக்க அரசோ அவ்வாறன ஒரு நிலையே இல்லை என சொல்லிகொண்டிருக்கிறது.
சமதனத்தின் பின் கையடக்கத்தொலைபேசிகளோடு கலகலத்த யாழ்ப்பாணம்; சாமாதானம் சேடமிழுக்க தொடங்க, கைத்தொலைபேசி இணைப்புக்களும் போய்விட ஆங்காங்கே உள்ள தொலைத்தொடர்புச்சேவை நிலையங்களே தஞ்சம் என தனது 2000 ஆம் ஆண்டைய பழைய நிலைக்கு திரும்பி இருக்கிறது. அதிலும் கம்பி வழி தொலைத்தொடர்பு நிலையங்களுக்கு தொடர்பெடுப்பது ஓரளவு இலகுவானது. ஆனால் மோட்டரோலா எனப்படும் அன்ரனா மூலம் தொடர்புகொள்ளும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பெடுத்து பேசிவிட்டால் நீங்கள் மிக அதிஸ்டசாலிகள். தொலைத்தொடர்பு நிலையத்தில் உள்ள தொடர்பெடுத்து உறவினர்களை குறிப்பிட்ட நேரத்துக்கு வருமாறு சொல்லிவிட்டு அந்த நேரம் அழைப்பெடுக்க முற்பட்டால் அந்தோ பரிதாபம் தொடர்பு கிடைக்காது ஏமாற்றம் தான் மிஞ்சும். இவற்றுக்குள்ளாலும் உறவினர்களுடன் தொடர்பு கொண்ட போது அவர்கள் மூலம் அறிந்து கொண்ட அங்குள்ள நிலமைகளின் சாரத்தை முதலில் தருகிறேன். பின்னர் ஊடகங்களில் வந்த செய்திகளின் சாரத்தை பார்க்கலாம்.
சில்லறை கடைகளில் அத்தியாவசியாமன உணவு பொருட்கள் ஏதுமற்றநிலை. கடைகள் வெறுமையாகிவிட்டன (எமது பாணியில் சொன்னால் ஒழிகடை). கடையில் எஞ்சி உள்ளவையோ பற் தூரிகை, பற்பசை போன்ற அத்தியாவசியமற்ற பொருட்களே. காலையும் மாலையும் மக்கள் பாண் (Bread) வாங்குவதற்காக வரிசையில் நிற்கிறார்கள். சில கடைகள் பாண் விற்பதற்காக மட்டுமே காலையும் மாலையும் திறக்கப்படுகிறன.
அத்தியாவசிய உணவு பொருகளான கோதுமை மா, சீனி என்பன தனியார்கடைகளில் கிடைத்தால் அது முயற்கொம்பு. ஒரு கிலோ சீனியின் விலை 160 ரூபாக்களை தாண்டி போய் பலகாலம். பலநோக்கு கூட்டுறவு சங்கங்கள் 250 கிராம் சீனியை பங்கீட்டு அட்டைக்கு வினியோகித்தன.
இனி ஊடகங்களில் வந்த செய்தியை பார்ப்போம்.
1. இந்த நாட்டிலுள்ள சிறுவர்கள் காலை வேளையில் பாடசாலைகளுக்கு செல்வதைப் பார்க்க சந்தோசமாக இருக்கிறது. ஆனால் யாழ். குடாநாட்டிலுள்ள மாணவர்கள் கடந்த ஒரு மாத காலமாக காலையில் கடைகளுக்கு முன்பாகவும் பேக்கரிகளுக்கு முன்பாகவும் வரிசையில் நிற்கும் மிகப் பெரும் அவலத்தையே இன்றைய யுத்த சூழல் தோற்றுவித்துள்ளது என்று கூறியவாறு தன்னையே மறந்து கண்ணீர் விட்டழுதார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.சிவநேசன்.
நன்றி..
2. பசியின் கொடுமை தாங்காது குடும்பஸ்தர் ஒருவர் வீதியால் பெண்ணொருவர் வாங்கிச் சென்ற அரிசியை அபகரித்துக் கொண்டு ஓடிய பரிதாப சம்பவமொன்று யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது; ......
........
பசியின் கொடுமையால் ஓடக்கூட முடியாது நின்ற அக்குடும்பஸ்தர் தானும் மனைவி பிள்ளைகள் எவருமே நான்கு நாட்களாக சாப்பிடவில்லை எனவும் பசிக்கொடுமை தாங்கமுடியாததால் குழந்தைகள் பசியால் வாடுவதைப் பொறுக்க முடியாது தான் இவ்வாறு செய்ததாகவும் விம்மி அழுது கூறியுள்ளார்.
3. அரிசியின் விலை நாளுக்கு நாள் கிடுகிடுவென உயருகின்றது. யாழ். நகரை அண்மித்த வர்த்தக நிலையங்களில் ஒரு கிலோ அரிசி ரூபா 135 ஆக விற்பனையானது.பத்து கிலோ கொண்ட சிறிய அரிசி மூடை 1,350 ரூபா விலைபோனது. இதே சமயம் தேங்காய் எண்ணெய்யின் விலையும் லீற்றர் ஒன்று ரூபா 245 இற்கு விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிகின்றது.தினசரி பொருள்களின் விலை அதிகரித்துக் கொண்டே செல்வதால் பாவனையா ளர்கள் தாம் பெரிதும் கஷ்டங்களை எதிர்கொள்வதாகக் கூறுகின்றனர்.
உதயன் 25/09/06
4.
மரவள்ளி மாவில் சுவையான உணவுப் பொருள் தயாரிக்கலாம்
எமது பிரதேசத்தில் தற்போது காணப்படுகின்ற கோதுமை மா தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய மரவள்ளி மாவை பயன்படுத்துவோம். இதில் கிட்டத்தட்ட 35 வீதம் காபோகைதரேற்று காணப்படுகின்றது. விவசாயிகளிடம் இருந்து நேரடியாக மரவெள்ளிக்கிழங்கை கிலோ 12 15 ரூபாவிற்கும், சந்தையில் கிலோ 25 ரூபாவிற்கும் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு மலிவாக கிடைக்கும் போது மரவள்ளி மாவை தயாரிக்கலாம். மரவள்ளி மா தயாரிக்கும் முறை மரவள்ளிக்கிழங்கின் தோலை உரித்து நீரில் சுத்தமாக கழுவிய பின் சிறுசிறு சீவல் களாக்கி 2 அல்லது 3 நாள்கள் வெயிலில் நன்றாகக் காயவைக்கவும். பின்பு தேவைக்கு ஏற்ப அளவு சீவலை உரலில் இடித்தோ அல்லது ஆலையில் கொடுத்து அரைத்தோ பயன்படுத்தலாம். ஒரு கிலோ கிழங்கில் இருந்து அண்ணளவாக 300 கிராம் மாவைப் பெறலாம்.மரவள்ளி மாவில் சுவாயான ரொட்டி தயாரித்தல் தேவையான பொருள்கள்:மரவள்ளி மா 500 கிராம், வெங்காயம் சிறிதளவு, மிளகாய் சிறிதளவு, தேங்காய் துருவல் சிறிதளவு, உப்பு தேவையான அளவு, நீர் தேவையான அளவு.செய்முறைஒரு கோப்பையில் மரவள்ளி மாவை இட்டு தேங்காய் பூ, வெங்காயம், மிளகாய் என்பவற்றை சேர்த்து மாவுடன் கலக்கிய பின்னர் தேவையான உப்பு, நீர் ஊற்றி குழைத்து சாதாரணமாக ரொட்டி மாவின் பதத்திற்கு எடுக்கவேண்டும். பின் சிறு சிறு உருண்டைகளாக்கி அவற்றை இலையில் தட்டி எடுத்து, அடுப்பில் உள்ள கல்லில் வேகவைத்து எடுக்கவும். பின்னர் சுடச்சுட உண்டால் நல்ல சுவையாகவும் வாசனையாகவும் இருக்கும்.
உதயன் 25/09/07
இந்தளவு தகவலும் இன்றைய நிலையை மிகத்தெளிவாக விளக்க போதுமானவை.
இவற்றை விட ஆங்கில செய்தி தளங்களில் அவ்வப்போது வந்த இணைப்புக்கள்.
2. ஐநா சபையின் அறிவிப்பு
Sri Lanka: with supplies cut ‘serious problem’ looms in Jaffna, UN warns
3. ரொய்ட்டர்
Sri Lanka's Jaffna adapts to siege, but food a worry
4. Jaffna on the verge of starvation as WFP suspends operations[ Morning Leader ] - [ Sep 20, 2006 10:16 GMT ]
5. Food situation in Jaffna choking says Red Cross
போர் நிறுத்தம் ஒன்று நடைமுறையில் உள்ளதாக சொல்லப்பட்டுகொண்டிருக்கும் போதே இன்நிலையென்றால் முழுமையான போர் தொடங்கினால் அப்பப்பா சொல்லவே தேவையிருக்காது.
பட்டிணி சாவை எதிர்கொள்ளும் மக்களின் அவலத்துக்கப்பல் நாளாந்தம் சுட்டுகொல்லப்படும், காணாமல் போகும் மக்களின் எண்ணிக்கை யாழ்குடா வாழ்வின் இன்னுமொரு அவலமான பக்கம்.
யாழ்குடாவில் இருக்கும் புலம்பெயர் மக்களின் பண உதவி உள்ள மக்கள், அரச பணியாளர்கள் என ஒரு பகுதியினருக்கு பணமிருந்தாலும் பொருளில்லாத நிலை.
ஆனால் நாளாந்தம் கூலி வேலைக்கும், மீன் பிடியையும் நம்பி குடும்ப வாழ்வை கொண்டிழுக்கும் மக்களின் நிலையை எண்ண ..... எதை சொல்வதென்றே தெரியவில்லை. இப்போதைய சூழ்நிலையில் கூலி வேலை எங்குகிடைக்கும்? , மீன்பிடி எப்படி செய்வது?
இவர்களின் குடும்பங்களின் நிலை என்ன??
95 க்குமுன்னும் யாழ்குடா நாடு உட்பட ஏனைய பகுதிகளும் பொருளாதார தடைக்குள் இருந்தன. ஆனால் வன்னிபெருநிலத்தொடு தொடர்புகள் இருந்தன. இதனால் அரிசியாவது கிடைக்ககூடிய நிலை இருந்தது. நாட்கூலி செய்வோர் தமது தொழிலை மாற்றி வேறு பகுதிகளில் இருந்து சைக்கிள் களில் விறகு, பொச்சு என பலவற்றை கொண்டு சென்று விற்று பொழுதை ஓட்டினார்கள்.
இன்றைய யாழ்குடா நாடு வன்னியின் தொடர்புமற்றுள்ளதால் அரிசிக்கும் தென்னிலங்கையை நம்பவேண்டிய நிலை. இராணுவ கெடுபிடிக்குள் விறகு கட்டி விற்று கூட பிழைப்பு நடத்தமுடியாத நிலலயில் மக்கள்.
யாழ்குடாவின் நெல்லுற்பத்தியில் பெரும் பங்காற்றும் தனங்களப்பு, அறுகுவெளி போன்ற பிரதேசங்கள் 5 வருடங்களுக்கு மேலாக நெற்செய்கைக்கு அனுமதிக்க படாது மிதிவெடிகளின் விளைநிலமாகியுள்ள அவலம். ஏனைய நெற்செய்கை பண்ணூம் சில பகுதிகளும் கடந்தவருடம் பெய்த அதிகரித்த மழையால் விளைச்சலற்றுப்போன நிலை என எல்லா பக்கத்தாலும் நொந்து போயிருக்கும் மக்கள்........
இவற்றுக்கு விடை எப்போது கிடைக்கும்??
இன்னும் நிறைய எழுதலாம். ஆனால் எழுதுவதால் ஏதும் பயன் கிட்டுமா??
எம் மன ஆறுதலுக்காக மட்டுமே........

0 Comments:

Post a Comment

<< Home