Tuesday, March 22, 2005

தண்ணீர் தண்ணீர்...........

Image Hosted by ImageShack.us


இப்படி ஒரு தொடர் கவிதை எப்போதோ வசித்த ஞாபகம். நிச்சயமாக இது கவிதயல்ல.

உலக தண்ணீர் தினமான இன்று தண்ணீர் பற்றிய ஒரு பார்வை.

தண்ணீருக்கான தேவை அதாவது தரமான குடி நீருக்கான தேவை நாளாந்தம் அதிகரித்து வருகிறது. நன்னீராதாரங்கள் பரப்பளவில் வேகமாக குறைந்துவருகிறன. அத்துடன் இருப்பவையும் மாசாக்கத்துக்குள்ளாகிவருகிறன.

எம் தாயகத்தில் இருக்கும் நன்னீராதாரங்கள் மாசக்கமடைந்துவருவதும் பரப்பளவில் குறைவடைந்துவருவதும் மிகவும் கவலைக்குரியது. இதைபற்றி யாரும் கவலைப்படுவதில்லை. பத்திரிகைகளில் இடையிடையே கட்டுரை வரும் அத்துடன் அதன் கதை முடிந்துவிடும்.

கேள்விக்குள்ளாகும் நிலத்தடி நீர் வளம்.

1. அதிகரித்த நீர் பாவனையால் வருடாந்தம் பெய்யும் மழை நீர் நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நீரை மீள் நிரப்பமுடியாமை. இதற்கு முக்கிய காரணம் நிலத்தடி நீர் சமநிலையை பேணுவதற்காh முன்னோரால் ஆங்காங்கு அடைக்கப்பட்ட சிறிய குளங்கள் [யாழ்பாணத்து குளங்கள்] கைவிடப்படல் தூர்வாரப்படாமை. மழைநீர் தேங்கி நிலத்தின் கீழ் வடிந்து செல்லாமல் கடலை வீணே சென்றடைகிறது. மழை நீர் குளங்களில் தேக்கப்படும் போது அது சிறுக சிறுக வடிந்து சென்று நிலத்தடி நீர்ச்சமநிலையை பேணுகிறது.
வன்னி பெருநில வாழ்பனுபவம் கொண்டவர்களுக்கு இது புரியும் பெருங்குளங்களில் நீர்வற்றி வாய்க்கால் வரண்டால் சில இடங்களில் கிணறு வெறுமையாகிவிடும்.
வவுனியாவில் ஆங்காங்கு காணப்படும் குளங்களை நிரவி வீடமைத்து வருவதால் நீர்த்தட்டுபாடு ஏற்படுவாதாக பத்திரிகைகளில் செய்தி வந்திருந்தது.

2. உவர் நீர் ஊடுருவல். இதை யாழ்குடாநாட்டை வாழ்விடாக கொண்டவர்களில் யாரேனும் கண்டு அனுபவித்திருக்க முடியும். அதிகரித்த நீர் பாவனை காரணமாக அடித்தளத்திலுள்ள உவர் நீர் மேலெழல். ஆரம்பத்தில் நன்னீராக இருந்த கிணறுகள் பல இன்று உவர் நீராக மாறியுள்ளன.




  • 3. மலசலகூட கழிவுகள் நிலத்தடி நீருடன் கலக்கும் சாத்தியம். மாரிகாலத்தில் நீர் மட்டம் பலஅடி மேலெழும் போது இரண்டும் கலக்க முடியும்.

    4. நிலத்தில் கொட்டப்படும் இரசாயன உலோக பொருட்கள் மழை நீருடன் கலந்து நிரத்தடி நீரை மாசாக்கும் சாத்தியம்

    5. விவசாயத்தில் பாவிக்கப்படும் உரத்தில் காணப்படும் அமோனியா யுரியா போன்றவை நைத்திரேற்றாக்கத்துக்குட்படும். இவை மண் துணிக்கைகளால் பற்றி வைத்திருக்கப்பட முடியாதவை. மண்ணும் நைத்தரேற்றுக்களும் எதிரேற்றமுடையவை. இதனால் இலகுவில் கழுவிச்செல்லப்பட்டு நிலத்தடி நீரை அடைகிறது. இவ்வாறு மாசாக்கமடைந்த நீரை அருந்துவதால் புற்று நோய் பிறக்கும், குழந்தைகள் நீலக்குழந்தை நோய்க்கு உட்படல் ஆகிய பிரச்சனைகள் ஏற்படலாம்.

    இதை தீர்க்க.. ... .. ..

    தற்போது மழைநீர் சேகரிப்பு முறைகள் பற்றி அறிமுகப்படுத்தப்படுகிறது.
    அத்துடன் சிக்கனமாக நீர்பாசன முறைகளை விவசாயத்தில் பயன்படுத்தல்.
    குளங்களின் புனருத்தாரணம்
    மhசாக்கும் கழிவுகள் பற்றிய கவனம் என்பவை மிகமுக்கியமானது. இதை பற்றி நாமனைவரும் சிந்தித்தால் நம் தாயகத்தை வளப்படுத்தலாம்.

    3 Comments:

    At March 22, 2005 11:03 pm, Blogger வசந்தன்(Vasanthan) said...

    குழைக்காட்டான்! நல்லாயிருக்கு.
    நீர் சொல்லித்தான் இண்டைக்கு உலக தண்ணீர் தினம் எண்டதே தெரியும். சுற்றுச் சூழல் மீது கரிசனை கொண்டு பதியும் உமது ஒவ்வொரு பதிவும் முக்கியமானது. தொடர்ந்து எழுதவும்.

     
    At March 23, 2005 12:51 am, Blogger tamil said...

    அருமையான பதிவு...
    வாழ்த்துக்கள்...

     
    At March 24, 2005 7:39 am, Blogger ஜெயச்சந்திரன் said...

    உங்கள் இருவரது வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி

     

    Post a Comment

    << Home