தண்ணீர் தண்ணீர்......... சில தீர்வுகள்
நீர் வளபாதுகாப்பு பற்றிய நேற்றைய பதிவில் காணப்படு;ம் சில பிரச்சனைகளுக்கான சாத்தியமான தீர்வுகள்.
தீர்வு என்று வரும் போது ஏற்கனவே வேறு நாடுகளில் பயன் படுத்தப்பட்டவற்றை அப்படியே இது இதற்கு தீர்வு என கூறமுடியாது.
பல இடங்களிலும் பயன்படுத்தப்படும் முறைகளை ஆராய்ந்து எமது சூழலுக்கு, வாழ்க்கை முறைக்கு, பொருளாதார வசதிகளுக்கு ஏற்ப மாற்றங்களை செய்வது அவசியமாகும்.
எமது நோக்கம் பலரது கவனத்தையும் ஈர்க்காத ஆனால் முக்கியமான பிரச்சனைகளை கவனத்துக்கு கொண்டுவருவதே.
சில சாத்தியப்படக்கூடிய தீர்வுகள்
உரப்பாவனையை முற்றாக குறைக்கமுடியாது.
உரப்பாவனையை முற்றாக குறைக்கமுடியாது.
ஆனால் சில செயன்முறைகளை பின் பற்றி நைத்திரேற்றாக்கத்தை குறைக்கமுடியும்.
1.ரார் பூச்சிட்ட யூரியா [Tar coated urea]இது நமது நாட்டில் கிடைப்பது அரிது. இதன் பயன் உரம் உடனடியாக கரைவதை குறைத்து சிறிது சிறிதாக[Slow releasing] மண்ணுக்கு இழக்கப்படுவதால் தாவரம் அதனை உடனடியாக பயன்படுத்திவிடும்.
இதற்கு பிரதியீடாக...இலங்கையில்
2.வேப்பம் பிண்ணாக்குடன் கலந்து உரமிடுதல் பயனளிக்கும் என கண்டறியப்பட்டது. ஆனால் மக்கள் பாவனைக்கு வரவில்லை. வேப்பம் பிண்ணாக்கில் காணப்படும் இரசாயனப் பொருட்கள் நைத்திரேற்றாக்கும் நுண்ணங்கி செயற்பாட்டை நிரோதிப்பதால் உரம் நீரில் கழுவிசெல்லப்படுவது குறையும்.
3.ஒரே தடவையில் முழு உரத்தையும் இடாமல் சிபாரிசு செய்யப்பட்ட அளவை சிறிது சிறிதாக பிரித்து [split application]சிறிய கால இடைவெளிகளில் இடல் .இதனை தாவரங்கள் வினைத்திறனாக அகத்துறுஞ்சுவதால் இழப்பு மாசாக்கம் என்பவை தடுக்கப்படும்.
மலசலகூட கழிவுகளுக்கு.
1.நிலக்கீழ் வடிகாலமைப்பு மூலம் சேகரித்து தொழில் ரீதியான சுத்திகரிப்பு தற்போது சாத்தியமற்றது.[Drainage and Sewage treatment plants]
2.மலசலகூட குழிகளின் அனைத்து புற சுவர்களையும் அடித்தளம் உட்பட நீர் ஊடுபுகமுடியாதவறு அமைத்தல் ஆனால் அடிக்கடி கழிவகற்றும் தங்கிகள் முலம் அகற்றவேண்டியிருக்கும்.
3.குழிகளில் பிரிவுகளை ஏற்படுத்தி முதலில் உள்ள சேகரிப்பு தாங்கியை மட்டும் நீர் ஊடுபுகமுடியாததாகவும் அது நீரல் நிரம்பி வடிந்து செல்வதற்கு அடுத்தநிலையில் உள்ள குழிகளை நீர் ஊடுபுககூடியதாகவும் அமைத்தல். இதன் மூலம் உடனடியாக கலப்பு ஏற்படும் சாத்தியம் இல்லது போவதுடன். முதல் குழியில் நொதித்லுக்கு உட்படும் போது பாதகமாக நுண்ணங்கிகள் இறந்துவிடும்.
4.குறிப்பிட்ட தூரக்கணக்கு நகரங்களுக்கு சரிவருமா? ஓருவீட்டின் கிணறும் மலசலகூடமும் 30 அடி தூரத்திலிருக்கும். ஆனால் அடுத்தவீட்டு குழி முதல் வீட்டின் கிணற்றுக்கருகில் இருக்கும். பின் எவ்வாறு தூர அளவை பேணுவது. அத்தோடு நிலத்தடி நீர் நிலையாக நிற்பதில்லை ஒரு இடத்தில் நீரகற்றப்பட அதை நிரப்ப சூழ உள்ள அனைத்து இடங்களிலிருந்தும் ஓடத்தொடங்கும். ஆகவே கலக்கமுடியதென்று கூறமுடியாது. ஆனால் குறைக்கமுடியும்.
யாழ்குடாவின் தீவகம் உட்பட ஏனையபகுதிகளிலும் கூரையில் விழும் மழைநீரை சேகரித்து பயன் பெறுவதற்கு தொட்டிகள் அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.ஆனால் அதன் வெற்றி மக்களின் அக்கறையிலேயே தங்கியுள்ளது.
2 Comments:
teating ,
Inayaththil oru iyatrkai vinjani aachariyam! "Nammaazvar"p polha oru jayachandiran Vaazththukkal! thodarka !
Post a Comment
<< Home