Tuesday, September 26, 2006

மீன் உண்ணலாம்....

Functional food எனும் பதத்தை எப்படி தமிழாக்குவது என்பதில் ஒரு குழப்பம். செயற்பாட்டு உணவுகள்/ தொழிற்பாட்டு உணவுகள் என்பதா? என் வசதிக்கு செயற்பாட்டு உணவுகள் என இப்பகுதியில் பயன்படுத்துகிறேன்.




செயற்பாட்டு உணவுகள் என்றால் என்ன ? என்பது சிந்திக்க வைக்கும் ஒரு வினா அதை பற்றி முதலில் சிறிது சொல்லிவிட்டு பின்னர் விடயத்துக்கு வருகிறேன்.


செயற்பாட்டு உணவுகள் என்பவையாவன உணவு அல்லது உணவு தயாரிப்புக்கள் சாதாரணமாக உணவு கொடுக்கும் பயன்களுக்கு மேலதிகமாக உடல் நலனை பேணும் செயலை ஆற்றகூடியன.


உதாரணமாக: ஒமேக 3 கொழுப்பமிலத்தை அதிகளவில் கொண்டிருக்கும் மீன், தாவர எண்ணேய் வகைகள் (சூரிய காந்தி எண்ணேய், நல்லெண்ணேய், சோயா எண்ணேய்) உடல் கொலஸ்திரோல் அளவை குறைத்தல்.


வளர்ந்த நாடுகளில் இன்று சந்தையில் கிடைக்ககூடிய செயற்பாட்டு உணவு வகைகளாக

ஒமெக 3 கொழுப்பமிலத்தை செறிவாக கொண்ட முட்டை, பாண் (Bread), சில வகை சிறப்பியல்பான இலத்திரிக் அமில பக்ரீரியாக்களை ( Lactic acid bacteria)கொண்டு நொதிக்கச்செய்யப்பட்ட யோகட், போன்றனவாகும்.



மீனும், மீனில் இருந்து தயாரிக்கப்பட்ட பொருட்களும் செயற்பட்டு உணவுகூட்டத்தில் முக்கிய பங்கை வகிக்கிறன.

மீன்

1. கல்சியத்திற்கான நல்ல மூலமாக இருக்கிறது
2. உயர்குருதி அழுத்ததை எதிர்க்கும் புரதம் (Protein),
பெப்ரைட்டுக்களை கொண்டிருக்கிறது
3. ஒட்சியேற்ற எதிரிகளை மீன் தோல் கொண்டிருக்கிறது
4. செலனியம், கைற்றின்( Chitin)
5. ஒமெக 3 கொழுப்பமிலம்
6. Taurine



1. மீனின் கழிவு பொருட்களில் இருந்து கல்சியம்


மீன் எலும்பானது கல்சியத்துக்கான மிக நல்ல மூலமாகும். முழுமையான சிறிய மீன் வகைகள் கல்சியத்தை அதிகளவில் கொண்டிருப்பதுடன் கல்சியத்தின் உயிரியல் கிடைதகவு (Bio availability) அதிகமாகும். ஆனால் பாற்பொருட்களுடன் ஒப்பிடும் கல்சியத்தின் கிடைதகவு மீனில் குறைவாகும். அண்மைய ஆராய்ச்சிகளில் மீன் எலும்பு, நண்டு ஓடு என்பவை கல்சியம் nutraceuticals தயாரிப்பதற்கு மிக நல்ல மூலப்பொருட்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.


2. உயிர்தொழிற்பாட்டு புரதங்களும், பெப்ரைட்டுக்களும்

மீனானது உயர் குருதியழுத்ததிற்கு எதிரான பெப்ரைட்டுகளை (Anti-hypertensive peptides) கொண்டுள்ளது. Sadine மீன் தசைகளில் இருந்து 13 வகையான உயர் குருதியழுத்ததிற்கு எதிரான பெப்ரைட்டுகளை ஆராய்ச்சியாளர்கள் பிரித்தெடுத்துள்ளானர். இவை மனிதரில் குருதியழுத்தத்தை குறைக்கும் சாத்தியப்பாட்டை அதிகமாக கொண்டுள்ளன.



நொதியங்கள் (Enzyme) மூலம் பரிகரிக்கப்பட்ட மீன் புரத பெறுதிகளும் இதயத்தை பாதுகாக்கும் ( Cardioprotective: Anti-atherogenic) காரணியாக இருப்பதால் செயற்பாட்டு உணவாக/ மருந்து பொருளாக கருதப்படுகிறது.


3. ஒட்சியேற்ற எதிரிகள்


Anguilla japonica, Conger myriaster ஆகியவை சீன உணவில் பிரசித்தமான eel மீன் இனங்களாகும். அத்துடன் இவை பாரம்பரிய சீன மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறன.

ஒட்சியேற்ற எதிரிகள் உடலை ஒட்சியேற்ற தாக்கத்திலிருந்து பாதுகாக்கிறன. இவை உயிரியல் ரீதியில் தாக்கமடையக்கூடிய ஒட்சிசன் இனங்களின் தாக்கதை தடுக்கிறன.

இம் மீன் இனங்களின் தோலில் இருந்தும், உடற் சதையில் இருந்தும் எடுக்கப்பட்ட சாறு free radical, hydroxyl radical ஆகியவற்றை அகற்றுவது அவதானிக்கப்பட்டுள்ளது.



4. செலனியம்

பொதுவாக மக்கள் செலனியம் குறைபாடு உடையவர்களாக இருக்க முடியும். அண்மைய ஆய்வுகள் சேதன செலனியமானது ஒரு புற்றுநோய் எதிரியாக இருக்கும் சாத்தியத்தை எடுத்துகூறுகிறன. மீன் பண்ணைகளில் இயற்கையில் அதிகளவு சேதன செலனியத்தை கொண்ட மூலப்பொருளான உள்ளி கலக்கப்பட்ட உணவை கொடுப்பதன் மூலம் மீனில் சேதன செலனியத்தின் அளவை அதிகரிக்க முடியும் என அறியப்பட்டுள்ளது.



5. ஒமேக 3 கொழுப்பமிலம்

மீன் பண்ணைகளில் வழங்கப்படும் உணவுகளில் ஒமேக 3 கொழுப்பமிலத்தின் அளவை அதிகரிப்பதன் மூலம் மீனில் இதன் அளவை அதிகரிக்க முடியும். இக்கொழுப்பமிலமானது இதய நலனுக்கு அத்தியாவசியமானதாகும்.



6. Taurine

அண்மைய மருத்துவ ஆய்வுகள் ஒரு நாளைக்கு 1 கிராம் Taurine உள்ளெடுப்பது இதய நலனுக்கு உகந்ததாக சொல்கிறன. மீனானது இதற்கான நல்ல மூலமாகும்.

மீன் இனங்களுக்கு ஏற்ப இதன் அளவு வேறுபடும் உதாரணமாக

Plaice = 126mg/100g
cod = 93 mg/100g
mackerel= 69 mg/100g
Albacore tuna =155g/100g
ray wing = 128g/100g



இவ்வாறு பல் வேறு உடல் நலனுக்கு உகந்த பல பொருட்களை மீன் கொண்டுள்ளதால் எதிர்காலத்தில் மீனானது தொழிற்பாட்டு உணவு/ மருந்து பொருள் தயாரிப்பில் மிக முக்கியமான ஒரு உணவு பொருளாக கருதப்படுகிறது.

12 Comments:

At September 26, 2006 6:08 am, Blogger Muthu said...

நல்ல பதிவு.நன்றி

 
At September 26, 2006 8:26 am, Blogger ஜெயச்சந்திரன் said...

நன்று உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.. முத்து (தமிழினி)

 
At September 26, 2006 9:31 am, Anonymous Anonymous said...

Fine. write more about Food for hypertention

 
At September 26, 2006 12:41 pm, Blogger G.Ragavan said...

மீன் எனக்கும் மிகவும் பிடித்த உணவு. கொழுப்பில்லாத உணவு. அதை எண்ணெய்யில் பொரித்துத் திங்கலாமா? அதுதானே சுவைக்கிறது?

 
At September 26, 2006 2:41 pm, Blogger ஜெயச்சந்திரன் said...

நிர்மல், வருகைக்கு நன்றி; எந்த சமையல் சிறந்ததௌ என்பதை பின்னர் எழுதுகிறேன்.

அனனி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. நீங்கள் கேட்டது பற்றியும் எழுதுகிறேன்.

ஜி ராகவன், வருகைக்கு நன்றி.

எந்த சமையல் உகந்தது என்று பின்னர் எழுதுகிறேன்.

 
At September 27, 2006 6:15 am, Blogger கசி said...

பிராமன வீடுகளிலேயே இப்போது மீன் சமைக்கிறார்கள்.

 
At September 27, 2006 10:24 am, Blogger ஓகை said...

நல்ல பதிவு. நன்றி.

ராகவன், பொறித்த மீனைப் போலவும் அல்லது அதைவிட சுவையானதுமான பல மீன் உணவுகள் உள்ளன. ஜப்பானியர் ஒருவகை மீனை சமைக்காமல் பச்சையாகவே சாப்பிடுவர்.

நுண்ணலை அடுப்பில் சமைக்கக் கூடிய பல வகைகளும் உள்ளன. ஜமாயுங்கள்.

 
At September 27, 2006 12:38 pm, Anonymous Anonymous said...

I am Fish Shop Owner. Your writings
help to increase my sale. Thanks.
Hi Friends Eat More Fish.

 
At September 28, 2006 3:01 pm, Blogger ஜெயச்சந்திரன் said...

This comment has been removed by a blog administrator.

 
At September 28, 2006 3:18 pm, Blogger ஜெயச்சந்திரன் said...

இராதாராகவன்,Natarajan Srinivasan, அனனி அன்பரே, உங்கள் அனைவரதும் வருகைக்கும், அன்புக்கும் நன்றி.

 
At October 02, 2006 12:50 am, Blogger Chandravathanaa said...

நல்ல பதிவு.
நான் ஒரு மீன் பிரியை. தகவல்களுக்கு நன்றி.

 
At October 04, 2006 6:25 am, Blogger ஜெயச்சந்திரன் said...

சந்திரவதனா அக்கா நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும். பல்ரும் மீன் பிரியர்களாக இருக்கிறீர்கள். நான் இன்று வரை மீனை சுவைத்தது இல்லை.

 

Post a Comment

<< Home