புகை பிடிக்கும் அன்பர்களுக்கு....
புகைபிடித்தல், அதனால் வரும் தீமைகள் ,அதை குறைப்பது பற்றி பலரும் எழுதியுள்ளார்கள். நான் இங்கு சொல்ல வருவது புகை பிடிப்பதால் வரும் தீமைகள் பற்றியோ அல்லது அதை குறைக்கும் வழிவகைகளொ அல்லது அதற்கான காரணங்கள் பற்றியோ அல்ல. பொதுவாகவே புலத்திலும் தாயகத்திலும் உள்ள இளம் சந்ததிக்கு அதன் தீமை பற்றி தெரிந்தே இருக்கிறது.ஆகவே மீண்டும் அதை பற்றி விபரிக்க விரும்பவில்லை.
இங்கு சொல்ல விரும்புவது புகைபிடித்துக் கோண்டிருப்பவர்கள், அதை தவிர்க்க முயன்றும் உடனடியாக தவிர்க்க முடியாது தொடருவோர் தமது உடல் நலனில் அக்கறை இருந்தால் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு விடயம் மட்டுமே.
புகைபிடிக்கும் போது புகையுடன் சுயாதீன முலிகங்கள் [Free radicles, Eg:- H. , OH. , .CH3] எனப்படும் கூறுகள் தொற்றுவிக்கப்படுகிறன. அவை குருதியோடு எடுத்து செல்லப்பட்டோ அல்லது சுவாசப்பையில் உள்ள கலங்களினது கருவிலுள்ள டி என் ஏ உடன் தாக்கம் புரிந்து விகாரங்களை எற்படுத்தன் மூலம் புற்று நோய் எற்பட காரணமாகிறன.
இவ்வகையான சுயாதீன முலிகங்களை நடுநிலையாக்குவதில் ஒட்சியேற்ற எதிரிகள்[Anti oxidants] எனும் பதார்த்தங்கள் முக்கிய பங்கு வகிக்கிறன.
பொதுவான ஒட்சியேற்ற எதிரிகளாக
1. விற்றமின் சி [Vitamin C ]
2. விற்றமின் ஈ [Vitamin E ]
3. கரோடினொயிட்டுகள் [ Carotenoids]
4. Fபிளெவனோயிட்டுக்கள்.[Flavanoids]
ஆகியவற்றை கூறலாம்.
இவற்றில் விற்றமின் C முக்கியமானது.
ஒரு சாதாரண சுகதேகிக்கு அவரது உடற் தொழிற்பாட்டுக்கு 60-70 mg விற்றமின் C நாளந்தம் தேவைப்படுகிறது.
இந்த அளவு விற்றமின் C ஐ நாளாந்தம் ஒரு தோடம் பழம் சாப்பிடுவதன் மூலம் நிறைவு செய்ய முடியும். அவ்வாறு இல்லவிட்டலும் பலவகையான பழங்கள், மரக்கறி வகைகளை அதன் புதுமை கெட்டாது உண்ணும் போது அத்தேவை நிறைவு செய்யப்படுகிறது.
புகை பிடிப்பவர்களுக்கு அவர்களது உடற் தொழிற்பாட்டு தேவைக்கு மேலதிகமாக புகையுடன் வரும் சுயாதீன மூலிகங்களையும் நடுநிலையாக்க அதிக விற்றமின் C தேவைப்படும்.
புகைபிடிப்பவருக்கு நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 120 Mg விற்றமின் C தேவையாகும். அவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு தோடம் பழங்கள் அல்லது அதிக அளவான இலை மரக்கறி பழவகைகளை நாளாந்தம் உண்ணவேண்டும்.
ஆயினும் புகை பிடிப்பவர்களின் உணவு பழக்கம் விரைவு உணவுகள் , அதிகளவில் பரிகரிக்கப்பட்ட உணவுகளாக இருப்பதால் போதுமான அளவு விற்றமின் C கிடைப்பதில்லை. இதனால் அவர்களுக்கு நோய் தாக்கங்கள் ஏற்பட ஏதுவாகிறது.
இதன் மூலம் சொல்ல வருவது என்ன என்றால் உங்கள் உடல் நலனில் அக்கறை இருந்தும் புகைபிடித்தலை விட முடியாத அன்பர்கள் அதிகளவு பழங்களையும் மரக்கறிகளையும் சேர்ப்பதன் மூலம் அவர்களுக்கு ஏறபடும் பாதிப்பை குறைக்கல்லாம் என்பதே. அதற்க்காக இதன் மூலம் உங்களுக்கு வரக்கூடிய பாதிப்புக்கள் இல்லது போய்விட்டது என்று அர்த்தமல்ல!
விற்றமின் C ஐ கொண்ட உணவுகள்
தோடம் பழம்
பிரஸல்ஸ் ஸ்பிரவுட் [Brussels sprouts ]
கிவி பழம்
ஸ்டொபெரி
மாம்பழம்
சமைக்கப்படாத சிவப்பு மற்றும் பச்சை Bell Pepper