Thursday, July 24, 2008

சோயா உணவு ஆண்களில் விந்து உற்பத்தியை பாதிக்கலாம்

சோயா உணவுகளை அதிக அளவில் உட்கொள்வது ஆண்களில் விந்து உற்பத்தியை பாதிக்கலாம் என அண்மைய ஆராய்சிகள் தெரிவிக்கிறன.
சோயா உணவை உட்கொள்ளும் ஆண்களில் காணப்படும் விந்து கலங்களின் எண்ணிக்கை சோயா உணவை உட்கொள்ளாத ஆண்களிலும் குறைவாக இருப்பதாக அறியப்பட்டுள்ளது. 15 வகையான சோயா உணவுகளை கொடுத்து செய்யப்பட்ட ஆராய்ச்சியில் சோயா உணவை உட்கொண்ட ஆண்கள் 41 மில்லியன் விந்து கலங்கள் / மில்லி லீற்றர் விந்து பாயத்தில் (திரவத்தில் )காணப்படுவதாகவும், இது பொதுவாக ஆண்களில் காணப்படும் சராசரி விந்து எண்ணிக்கையான 66 மில்லியன் விந்து கலங்கள்/ மில்லிலீற்றர் விந்து பாயத்திலும் கணிசமான அளவு குறைவாகும்.

சோயா உணவுகளில் உள்ள ஐசோ பிளேவோன்கள் (isoflavone)இதில் முக்கிய பங்கு வகிப்பதாக சொல்லப்படுகிறது. சோயா உணவுகளில், மற்றும் சில தாவர உணவுகளில் காணப்படும் தாவர ஈஸ்ரோஜன் (phytoestrogens) பெண்களில் காணப்படும் ஈஸ்ரோஜன் ஓமோனின் விளைவை ஒத்த விளைவை ஏற்படுத்துவதால் ஆண்களில் விந்து கலங்களின் எண்ணிக்கை, விந்து கலங்களின் அசையும் திறன், விந்தின் தரம் இறுதியில் உடலுறவுக்கான விருப்பம் என்பவற்றை பாதிப்பதாக சொல்லப்படுகிறது.

ஆனால் அண்மைய ஆய்வில் சோயா உணவு பற்றிய ஆய்வு விந்து கலங்களின் அசையும் திறன், விந்து கலங்களின் உருவ அமைப்பு, மற்றும் விந்து பாயத்தின் அளவுடன் தொடர்பை கொண்டிருக்கவில்லை என சொல்லப்படுகிறது.

மேலும் அதிக நிறையுடையவர்களிலும் விந்து கலங்களின் எண்ணிக்கை சாதாரணமானவர்களை விட குறைவாக இருப்பதாக அறியப்பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சி முடிவு கடந்த மாத விஞ்ஞான/ அறிவியல் ஏடு ஒன்றில் வந்ததாகும். ஆனால் 2005 ஆம் ஆண்டில் இது பற்றி ஒரு அறிக்கை அறிவியல் கூட்டம் ஒன்றில் வாசிக்கப்பட்ட போது அந்த அறிக்கையை நிராகரித்து வட அமெரிக்க சோய உணவு கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கை இது. இந்த அறிக்கையில் இந்த விடயம் பற்றி எந்த அறிவியல் ஏடுகளிலும் ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவில்லை எம்பதும் ஒரு முக்கிய காரணமாக அவர்களால் சொல்லப்பட்டுள்ளது (Fraser’s findings have not been published in a peer reviewed journal) . அண்மைய ஆய்வு முடிவு அங்கீகரிக்கப்பட்ட ஒரு விஞ்ஞான ஏட்டில் வெளிவந்திருக்கிறது. இதைபற்றி என்ன சொல்லப்போகிறார்கள் என தெரியவில்லை. வட அமெரிக்காவில் ஒரு முக்கிய வியாபார பயிராக விளங்கிவரும் சோயாவினால் வரக்கூடிய பாதகமான விளைவுகள் பற்றி அதிகம் ஆய்வு செய்யப்படாமைக்கு பொருளாதார ரீதியில் பலமான இப்படியான அமைப்புக்களும் காரணமாக இருக்கலாம். ஏன் எனில் சோய உணவின் நன்மைகள் பற்றிய ஆய்வுகளே அதிகம் வெளிவந்து இருக்கிறன/ வெளிவருகிறன.

Labels: , , ,