Saturday, February 24, 2007

பால் புரதங்கள் ( Milk proteins and peptides)

பால் புரதங்கள், பெப்ரைட்டுக்கள் (Proteins and Prptides) ஆகியவற்றின் உடல் நலன் சார்ந்த பங்களிப்புக்கள்






பால் புரதங்கள், பொதுவாக மனிதனுக்கு தேவையான அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் (Essential Amino Acids), நைதரசனுக்கான மூலமாக கருதப்படுவதோடு, உணவுப்பொருட்களை தயாரிப்பதற்கான ஒரு மூலப்பொருளாகவும் இருந்து வருகிறது. ஆனால் தற்போது பால் புரதங்களும், அவற்றோடு இணைந்த பெப்ரைட்டுக்களும் தொழிற்படு உணவுகளாக (Functional Foods) கருதப்படுவதால் முக்கியத்துவமானவையாக கருதப்படுகிறன.


பால் புரதங்களின் வகைகள்


பசுப்பாலில் இரண்டு உள்ள புரதங்களை பிரதானமாக இரண்டு வகையாக பிரிக்க முடியும்.


1. கேசின் (Caseins)


2. Whey proteins


மொத்த பால் புரதங்களில் கேசின் புரதப்பகுதி 76-86% ஆகவும், Whey proteins 14-24% ஆகவும் இருக்கிறன. மேலும்


கேசின் புரதமானது அல்பா, பிற்றா, காப்பா கேசின்கள் என வகைப்படுத்தப்படும்.



அதே போன்று Whey proteins


Lactalbumin


Lactoglobulin


Bovine serum albumin


Immunoglobulins


ஆகிய புரதங்களை பிரதானமாகவும்


Lactoferrin


Transferrin


Lactoperoxidase


Lysozymes


ஆகிய புரதங்களை சிறிதளவிலும் கொண்டது.


பால் புரதங்களில் காணப்படும் ஒவ்வாமை (Allergy) ஏற்படுத்தும் இயல்புகள்


பால் புரதங்கள் சில பேருக்கு, குறிப்பாக சிறுவர்களுக்கு பால் அருந்தியதன் பின் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.


இதனை ஆங்கிலத்தில் Cow's milk protein allergy என அழைப்பர்.


பால் புரத ஒவ்வாமையால்


தீவிரமற்ற ஒவ்வாமை வெளிப்பாடுகளாக


Rhinitis


Diarrhoea என்பவற்றையும்


மிக தீவிரமன ஒவ்வாமை வெளிப்பாடுகளாக


Asthma


Dermatitis


Anaphylactic shock ஆகிய வற்றையும் சொல்ல முடியும்.


இவ்வாறான ஒவ்வாமை வெளிப்பாடுகள் பாலை அருந்திய உடனடியாக வெளிப்படுத்த படாமல், சிறிது சிறிதாக உடலில் அபிவிருத்தியடைய முடியும். அதாவது நாளாந்தம் பால் பருக பருக உடல் அதை எதிர்ப்பதற்காக எதிர் விளைவுகளை படிப்படியாக உருவாக்கி, இறுதியில் ஒவ்வாமையாக வெளிப்படலாம்.


Casein, lactalbumin, lactoglobulin ஆகிய புரதங்களே ஒவ்வாமை ஏற்பட காரணம் என சொல்லப்படுகிறது.


பொதுவாக குழந்தைகளில் 2-3% ஆனவர்களுக்கு இவ்வாறான சிக்கால் ஏற்பட முடியும்.



பால் புரதங்கங்களில் காணப்படும் புற்று நோய்க்கு எதிரான (Anti-cancer) இயல்புகள்


அதிக கொழுப்பை (fat)கொண்ட உணவுகள், குறைந்த நார் (fibre)சத்துக்களை கொண்ட உணவுகள், குறைந்த அளவு நுண்ணூட்டச்சத்து (micronutrients) கொண்ட உணவுகள் என்பன புற்று நோய் ஏற்பட காரணமாக இருப்பதாக அறியப்பட்டுள்ளது.குறிப்பாக குதப்புற்று நோய் (colorectal cancer ) ஏற்படுவதற்கு.


விலங்குகளில் செய்யப்பட்ட ஆய்வுகளில் பால் புரதங்கள் புற்று நோய் கட்டிகள் (Tumour) உருவாவதை குறைப்பது கண்டறியப்பட்டுள்ளது.


Whey protein எலிகளில் புற்று நோய் ஏற்படுவதை குறைப்பது அறியப்பட்டுள்ளது.


Bovine serum albumin, lactalbumin என்பன மனிதரில் மார்பக புற்று நோயை குணமாக்குவதாக அறியப்பட்டுள்ளது.



பால் புரதங்களில் காணப்படும் உயிர் தொழிற்பாட்டு (bio-active) பெப்ரைட்டுக்கள்


பாலில் காணப்படும் உயிர் தொழிற்பாட்டு பெப்ரைட்டுக்கள் நுண்ணுயிர் எதிரிகளாக (anti microbial), நிர்ப்பீடன சீராக்கிகளாக (immunomodulatory), உயர் குருதியழுத்ததை (hypertension)குறைப்பனவாக, கனியுப்புக்களை பற்றி (mineral binding) வைத்திருக்கும் ஊடகங்களாக தொழிற்படுகிறன.



நிர்பீடன சீரக்கி (immunomodulatory) புரதங்களும், பெப்ரைட்டுக்களும்


மனிதன் நிர்பீடன தொகுதியானது (immune system) மனிதனை தொற்றுக்களில் (infection) இருந்து காப்பதிலும், புற்று நோயை எதிர்ப்பதிலும் பங்காற்றுகிறது.


நிர்பீடனத்தொகுதியில் ஏற்படும் குறைப்பாடு, மனிதனை இலகுவில் நோய்த்தொற்றுக்கு உள்ளாகும் சாத்தியப்பாட்டை அதிகரிக்கிறது.


பால் புரதங்களும், அவற்றின் நொதித்தலால் உருவான பெப்ரைட்டுக்களும் மனிதனின் நிர்பீடன தொகுதியை தூண்டுவது அறியப்பட்டுள்ளது. பால் புரதங்கள் உடலில் காணப்படும் Macrophages எனும் கலங்களின் தொழிற்பாட்டை தூண்டுவது அறியப்பட்டுள்ளது. இக்கலங்கள் உடலில் நுளையும் பிற பொருட்கள், நுணங்கிகள் என்பவற்றை அழிக்கிறன.















Thursday, February 15, 2007

மீன், ஒமேக 3 கொழுப்பமிலங்கள்

இந்த பதிவு ஜி. இராகவன் அவர்கள் கேட்டு கொண்டதற்கிணங்க பதிவிடுகிறேன்.

மீன்களின் தமிழ் பெயர்கள் தெரியாதாகையால் ஆங்கில பெயர்களையும் அவற்றின் படங்களையும் இடுகிறேன்.
சில மீன் இனங்களும் அவற்றில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பமில அளவுகளும் வருமாறு.


1. Cod







Cod liver oil

இகோசபென்ரினோயிக் அமிலம் (Eicosapentaenoic acid) 7.3%
டொகொசொகெக்சினோயிக் அமிலம் (Docosohexaenoic acid)7.4%

2. Alaskan herring

இகோசபென்ரினோயிக் அமிலம் (Eicosapentaenoic acid) 11.4%-15.2%
டொகொசொகெக்சினோயிக் அமிலம் (Docosohexaenoic acid)4.7%-7.8%

3.Atlantic herring

இகோசபென்ரினோயிக் அமிலம் (Eicosapentaenoic acid) 2.85%
டொகொசொகெக்சினோயிக் அமிலம் (Docosohexaenoic acid) 2.70%




4. Pacific anchovy

இகோசபென்ரினோயிக் அமிலம் (Eicosapentaenoic acid) 18.24%
டொகொசொகெக்சினோயிக் அமிலம் (Docosohexaenoic acid) 10.28%


5. Mackerel






இகோசபென்ரினோயிக் அமிலம் (Eicosapentaenoic acid) 7.64%
டொகொசொகெக்சினோயிக் அமிலம் (Docosohexaenoic acid) 7.66%

மேலே தரப்பட்ட தரவுகள் Food science and Technology 19(4), 2005 இல் இருந்து பெறப்பட்டவை.
படங்கள் யாகூ தேடுபொறியில் அகப்பட்டவை.

மீன்,ஒமேக 3 கொழுப்பமிலம், இதய நோய் பற்றிய ஆய்வு அறிக்கை ஒன்றுக்கான இணைப்பை கீழே கொடுத்துள்ளேன்.
http://circ.ahajournals.org/cgi/content/full/106/21/2747

Sunday, February 11, 2007

ஒமேக 3 கொழுப்பமிலங்கள் என்றால்??

இப்போது ஒமேகா 3 கொழுப்பமிலங்கள் (Omega-3 fatty acids ), அவற்றின் முக்கியத்துவம் என்பன பற்றி பரவலாக பேசப்படுவதுடன், பல நாடுகளில் இக்கொழுப்பமிலங்களை கொண்ட முட்டைகள், மாஜரீன் என்பவை சந்தைப்படுத்தப்படுகிறன. முன்னய எனது மீன் உண்ணலாம் எனும் பதிவிலும் ஒமேக 3 கொழுப்பமிலங்கள் உள்ள மீன்வகை பற்றி எழுதியுள்ளேன்.
இப்பகுதியில் ஒமேக 3 கொழுப்பமிலங்கள் என்றால் என்ன? அவை ஏன் எமக்கு அத்தியாவசியமானவை என்பவை பற்றி சிறிது சொல்ல்லாம் என்று நினைக்கிறேன்.

கொழுப்பமிலங்கள் (Fatty acids)

கொழுப்பு (Fat) உணவுகளின் முக்கிய செயற்படு பகுதியாக இருப்பவை கொழுப்பமிலங்களே. கொழுப்பமிலங்கள் கொழுப்பின் உருகுநிலையை (Melting point)/ கொழுப்பு பதார்த்தங்கள் எவ்வளவு விரைவில் பளிங்காக (Crystal) மாற்றம் அடைகிறது என்பதையும் தீர்மானிக்கிறன. அத்துடன் கொழுப்பமிலங்கள் கொழுப்பின் ஊட்டச்சத்து பெறுமானத்தையும் தீர்மானிக்கிறன. இங்கு ஊட்டச்சத்து பெறுமானங்கள் எனும்போது கொழுப்பில் இருந்து கிடைக்கும் சக்தி( Energy) ஐ மட்டும் கருத வில்லை. கொழுப்பமிலங்களால் உடலின் அனுசேபம் (Metabolism), உடல் நலம் போன்றவற்றில் ஏற்படும் விளைவுகளையும் உள்ளடக்கியதாகும்.

கொழுப்பமிலங்களை பொதுவாக அவற்றில் இருக்கும்
1. காபன், அணுக்களின் எண்ணிடக்கையை கொண்டு ( காபன் - காபன் சங்கிலி) ,
அல்லது

2. காபன் காபன் அணுக்களுக்கிடையே ஆனா பிணைப்பு வகையை கொண்டு வகைப்படுத்தலாம்.


1. நிரம்பிய கொழுப்பமிலம் ( Saturated fatty acid)

இவ்வகையான கொழுப்பமிலங்களில் காபன் அணுக்க்ளுக்கிடையே ஒற்றை பிணைப்பு காணப்படும்.

2. நிரம்பலடையாத கொழுப்பமிலம் (Unsaturated fatty acid)

இவ்வகையான கொழுப்பமிலங்களில் காபன் சங்கிலியில் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் காபன் காபன் அணுக்களுகிடையே இரட்டை பிணைப்பு காணப்படும்.


நிரம்பலடையாத கொழுப்பமிலங்களை மேலும்

a) ஒற்றை நிரம்பலடையாத கொழுப்பமிலங்கள் (Mono unsaturated fatty acids)
b) பல் நிரம்பலடையாத கொழுப்பமிலங்கள் ( Poly unsaturated fatty acids)


Image Hosted by ImageShack.us


பல் நிரம்பலடையாத கொழுப்பமிலங்கள் மேலும் இரண்டாக வகுக்கப்படுகிறன.

a)ஒமேகா 6
b)ஒமேகா 3

இதற்கான விளக்கப்படம் மேலே உள்ளது. இங்கு ஒமேக என்பது கிரேக்க மொழியின் ஒரு எழுத்தாகும். இலக்கங்கள் காபன் அணுக்களுக்கிடையில் எந்த இடத்தில் முதலாவது இரட்டை பிணைப்பு வருகிறது என்பதை குறிப்பதாகும்.

ஒமேக 3 கொழுப்பமிலம்

வேறுபட்ட வகையான ஒமேக 3 கொழுப்பமிலங்கள், பல் வேறுபட்ட காபன் அணுக்களின் எண்ணிகையில் காணப்படுகிறன.

முக்கியமான ஒமேக 3 கொழுப்பமிலங்கள்

1. அல்பா லினொலெய்க் அமிலம் (Alpha linoleic acid )
இது 18 காபன் அணுகளையும், 3 இரட்டை பிணைப்புக்களையும் கொண்டது.

2. இகோசபென்ரினோயிக் அமிலம் (Eicosapentaenoic acid)
இது 20 காபன் அணுக்களையும், 5 இரட்டை பிணைப்புக்களையும் கொண்டது.

3. டொகொசொகெக்சினோயிக் அமிலம் (Docosohexaenoic acid)
இது 22 காபன் அணுக்களையும், 6 இரட்டை பிணைப்புக்களையும் கொண்டது.


அல்பா லினொலெய்க் அமிலம் லினோலெய்க் அமிலம் என்பவற்றை உணவின் மூலம் மட்டுமே பெற்று கொள்ள முடியும்.

மனித உடலானது அல்பா லினொலெய்க் அமிலத்தில் இருந்து இகோசபென்ரினோயிக் அமிலம்,
டொகொசொகெக்சினோயிக் அமிலம் ஆகிய வற்றை தயாரித்து கொள்ளும்.

இகோசபென்ரினோயிக் அமிலம் (Eicosapentaenoic acid) கல மென்சவ்வின் (Cell membrane)ஒரு கூறாகும்.

டொகொசொகெக்சினோயிக் அமிலம் மூளை, மைய நரம்பு தொகுதி, கண்ணின் பார்வைக்கலங்கள் என்பவற்றின் கலங்களின் கல மென்சவ்வுகளின் முக்கிய கூறாகும்.



ஒமேக 3 கொழுப்பமிலங்களின் இயற்கை மூலங்கள்

சோயா எண்ணேய், ரப் எண்ணேய் (Brassica Napus =Rape) என்பவற்றில் காணப்படுகிறது. லின் விதை எண்ணேய் மிக அதிக அளவாக 60% ஒமேக 3 கொழுப்பமிலத்தை கொண்டுள்ளது. வெல் நட், குறிபிட தக்க அளவு ஒமேக 3 கொழுப்பமிலத்தை கொண்டுள்ளது.

இலை மரக்கறி வகைகளும் குறிப்பிடத்தக்க ஒமேக 3 கொழுப்பமிலத்துக்கான மூலங்களாகும்.

கொழுபு நிறைந்த மீன், மீன் எண்ணேய் என்பனவும் மிக முக்கிடமான மூலங்களாகும்.

ஒமேக 3 கொழுப்பமிலத்தின் உடல் நலன் சார் பங்களிப்புக்கள்

ஒமேக 3 கொழுப்பமிலங்கள் பல நோய் பாதிப்புக்களில் இருந்து மனிதனை பாதுகாப்பதாக சொல்லப்படுகிறது. இவற்றில் சில இன்னும் சரியாக நிருபிக்கப்படவில்லை. பல நிருபிக்கப்பட்டுள்ளன.

1. இதய நோய்கள் (Cardiovascular disease)

ஒமேக 3 கொழுபமிலம் இதய நோயை குறைக்கிறது. கிரின்லாந்தில் அதிகளவில் கொழுப்பு நிறைந்த உணவு உண்போர்களிடையே மிக குறைந்தளவே இதய நோய்கள் இருப்பது அறியப்பட்டுள்ளது. இத்தாலியில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் 1 கிராம்/ நாள் எனும் விகிதத்தில் கொடுக்கப்படும் போது போது 45% இதய நோயை குறைப்பதாக அறியப்பட்டுள்ளது.

2. புற்று நோய்

ஒமேக 3 கொழுப்பமிலம் மார்பக புற்று நோய், சமிபாட்டு தொகுதியில் குத புற்று நோய் என்பவற்றை குறைப்பதாக அறியப்பட்டுள்ளது.



3. அல்சைமர், டிமென்சியா நோய்கள் (Alzheimer's and Dementia)



டொகொசொகெக்சினோயிக் அமிலம் அல்சைமர் நோயை குறைப்பதாக அறியப்பட்டுள்ளது. அத்துடன் மீன் உணவு, டினெசியா நோயை குறைப்பதும் அறியப்பட்டுள்ளது.


4. மனவழுத்தம் (Depression)

மனவழுத்த நோய் உள்ள வயதானவர்களின் குருதியில் ஒமேக 6 கொழுப்பமிலத்துக்கும் ஒமேக 3 கொழுப்பமிலத்துக்குமான விகிதம் நோய் அற்றவர்களின் குருதியிலும் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒமேக 3 கொழுப்பமிலம் மனித உணர்வுகளின் வெளிப்பாட்டில் இக்கொழுப்பமிலம் பங்கு வகிக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

5. கர்ப்ப காலத்திலும், குழந்தை பருவத்திலும்

கர்ப்ப காலத்தில் ஒமேக 3 கொழுப்பமிலங்கள் நிறைவாக கிடத்தால் குழந்தையின் நரம்பு தொகுதி, கண்ணின் பார்வைக்கலங்கள் என்பன சிறப்பாக விருத்தி அடைய உதவும் என சொல்லப்படுகிறது.


நாளாந்தம் உள்ளெடுக்க வேண்டிய ஒமேக 3 கொழுப்பமில அளவு

உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரை

எமது நாளாந்த சக்தி உள்ளெடுப்பிம் 1-2% ஒமேக 3 கொழுப்பமிலம் மூலம் கிடைக்க வேண்டும் எங்கிறது.

மேலும் இவற்றில் 1.5-3 கிராம்/ நாள் அல்பா லினொலெய்க் அமிலமும் இகோசபென்ரினோயிக் அமிலம், டொகொசொகெக்சினோயிக் அமிலம்
என்பவை 0.5-1.8 கிராம்/ நாள் எனும் விகிதத்திலும் உள்ளெடுப்பது சிறப்பானது என சொல்லப்படுகிறது.


முடிவாக சிறுவர்களுக்கு மீன் உணவு கொடுப்பதன் மூலம், அவர்களின் மூளை வளர்ச்சியை சிறப்பாக அமைக்க முடியும். இதன் முகிய காரணம் மீன் அதிக அளவில் ஒமேக 3 கொழுப்பமிலத்தை கொண்டிருப்பதாகும். அத்துடன் வயதானவர்களும் இதை ஒமேக 3 கொழுப்பமிலம் முலம் இதய நோய், புற்று நோய் என்பன ஏற்படுவதில் இருந்து பாதுகாப்பை பெற முடியும்.