Monday, August 22, 2005

தாவர போசனத்தின சாதக பாதகங்கள்

Image Hosted by ImageShack.us


உணவானது ஒரு குடித்தொகையின் போசணைத்தேவையை பூர்த்திசெய்யக்கூடியதாக இருப்பதோடு அது அக்குடித்தொகையின் சுகநலன்களை நன்நிலையில் பேணுவதாகவும் இருக்கவேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் அதிகரித்த உடல் நிறை, நீரிழிவு, என்பவை மிகவும் பாதிப்புதரும் அளவில் உயர்ந்து காணப்படுகிறது. அதேவேளை தாவர பொருட்களை அதிகமாக உட்கொள்வதும் அது சார் வாழ்க்கைமுறையும் உடல் நிறை அதிகரிப்பு உயர் இரத்த அழுத்தம் நீரிழிவு இதய நோய்கள் ஆகியவற்றின் ஆபத்தை குறைக்கும் திறன் வாய்ந்தவையாக நம்பப்படுகிறது.

தாவர போசனத்தின் வகைகள்

எம்மை பொறுத்தவரை சைவம், அசைவம் (மச்சம்) என பெரும்படியாக பிரித்து விடுவோம். எமது எண்ணக்கருவில் தாவர போசனம் என்பது பாலுடன் சேர்ந்த தாவர உணவு உண்போரை குறிக்க பயன்படுகிறது. ஆனால் தற்போதய நவீன பாகுபாடு வேறானது

1. தாவரபோசனம் (veganism)
முழுமையாக தாவர உணவை உண்போர், பால் முட்டையும் உள்ளெடுப்பதில்லை

2. பாலுடனான தாவர போசனம் (Lactovegetarianism)
இறைச்சி, மீன் , முட்டை உண்பதில்லை
3. பால், முட்டையுடனான தாவரபோசனை ( Lacto ovo vegeterianism)
மீன் இறைச்சியை தவிர்ப்போர்.
4. முட்டைய்டனான தாவர போசனம் (Ovo vegeterianism)
மீன் இறைச்சி பால் உள்ளெடுப்பதில்லை

பொதுவாக தாவரபோசணை உள்ளெடுப்போரில் 70% பேர் பால் முட்டையுடனான தாவரபோசணிகளாக உள்ளனர். மிககுறைவாக 10 வீதத்திலும் குறைவானோர் தனி தாவர போசணிகளாவர். இவ்வகையான உணவுபழக்கம் உடல் நலனை பாதிக்க கூடியதாக இருக்கும்.

பொதுவாக தனித்தாவர உணவை மட்டும் உள்ளெடுப்பதால் இரண்டு பிரதான ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படுவது சாத்தியம் ஆகும். அவையாவன

1. இரும்பு (Iron)
தாவர உணவை மட்டும் உண்போருக்கு போதுமான அளவில் இரும்புசத்து கிடைப்பதில்லை. தாவர உணவுல் ஒப்பீட்டளவில் அதிகளவான இரும்பு காணப்பட்டலும் அது உடலால் இலகுவில் அகத்துறுஞ்ச முடியாத சிக்கல் சேர்வைகளாக காணப்படுகிறது. இதனால் இரும்பு பற்றக்குறை ஏற்படுகிறது. இது அதிகளவில் தாவர உணவை மட்டும் அல்லது தாவர உணவை அதிகமாக உண்போரில் காணப்படிகிறது. இப்பிரச்சனை கர்ப்பிணி பெண்களில் மேலும் அதிகமாக இருக்கும். தாயில் ஏற்படும் இரும்பு பற்றாகுறையானது வளரும் கருவினதும் பிறக்கும் குழந்தையினதும் மூளைவளர்ச்சியை பாதிக்கும்.

2. விற்றமின் வழங்கல் (B12)

தாவர போசனையின் இன்னுமொரு பாதகமான அம்சம் விற்றமின் B12 போதுமான அளவில் கிடைக்காமையாகும். விலங்குணவுகளான பால், முட்டை, இறைச்சி, மீன் என்பவை விற்றமின் B12 ஐ அதிகளவில் கொண்டிருப்பதுடன் இது எந்தவொரு தாவர உணவிலும் காணப்படுவதில்லை என்பது அதன் சிறப்பம்சமாகும். தொடர்ச்சியான தாவர போசணமானது குருதியில் விற்றமின் B12 அளவில் வீழ்ச்சியை ஏற்படுத்துவது அவதானிக்கப்பட்டுள்ளது.
போதுவாக ஈரலில் சேமிப்பாக விற்றமின் B12 காணப்படுகிறது. இச்சேமிப்பனது ஓரளவு நீண்டகாலத்துக்கு போதுமானதாக இருந்தாலும் தொடர்ச்சியாக பால் முட்டை உட்பட எந்த விலங்குணவையும் உள்ளெடுக்கது விடுவது விற்றமின் B12 பற்றக்குறைக்குரிய அறிகுறைகள் , அது சார் நோய்கள் தோன்ற வழிவகுக்கும் . இதன் குறைபாட்டு அறைகுறிகளாக குருதிச்சொகை, இளைப்பு, சோர்வு, என்பவை விழங்குகிறன.இவை விற்றமின் மீள கிடைக்கும் போது இல்லது போககூடியவை.

அதிகரித்த விற்றமின் B12 பற்றக்குறை மைய நரம்புதொகுதியை மீள் முடியாதவாறு பாதிக்குமற்றல் வாய்ந்ததாகையால் தாவர உணவை உள்ளேடுப்போர் விற்றமின் B12 குறைநிரப்பு உணவு உள்ளெடுத்தல் அவசியம்.

அதேநேரம் தாவர போசணையின் பிரதான உணவுகளாக பழங்கள், மரக்கறிகள் விழங்குகிறன.இவை அதிகளவு விற்ற்மின்கள் ஒட்சியேற்ற எதிரிகாளையும் உயிர்தொழிற்பட்டு சேர்வைகளையும் கொண்டிருக்கிறன. இதனால் தாவர உணவை உணபவர்களின் குருதியில் அதிகளவில் விற்றமின் C , B கரோட்டீன் என்பவை பல்வேறு நீடித்த நோய்களான புற்று நோய், இதய குருதிகலனில் ஏற்படும் நோய்களை குறைப்பதில் உதவுகிறன.

A) நார்பொருள் உள்ளெடுத்தல்

நார்பொருள் உள்ளெடுதலானது தாவர போசனை பிரிவினரில் அதிகளவில் காணப்படுகிறது. நீண்ட காலமாக நார் பொருள் உள்ளெடுத்தல் சாதகமானதா பாதகமானதா என்பது விவதத்துகுரியதாக இருக்கிறது. ஆயினும் தறபோது அதன் புற்று நோயைகட்டுப்படுத்தும் சாதகத்தன்மை பெரிதும் மெச்சப்படுகிறது.

தாவர போசணையை திட்டமிடல்

பால், முட்டையுடனான தாவர போசணையானது உடலுக்கு தேவையான அனைத்து உட்டச்சத்துகளையும் வழங்க கூடியதாக இருக்கிறது.

தனித்தாவர உணவு உண்போர் கர்ப்பகாலம், வளரும் பருவம், நோய்வாய்பட்ட நேரங்களில் விற்றமின் B12, இரும்பு சத்துக்கான குறை நிர்ப்பு உணவு உள்ளெடுத்தல் அத்தியாவசியமானது.

இறைச்சி உணவானது மேலே குறிப்பிட்ட நோய்களை குறைத்தலுக்கான காரணியாக கொள்லமுடியாதயினும் உணவு பழக்கத்தை மீள ஒழுங்கு படுத்தல் சீரான் உடற்பயிற்சி, குறைந்த மது, புகையிலை பாவனை என்பன உடல் நலனை பாதுகாப்பதில உதவும்.