செயற்கை இனிப்பூட்டிகள்
tசிறியோர் முதல் பெரியோர் வரை விரும்பப்படும் இனிப்பு சுவையை பெறுவதற்கு வெல்லங்களே பொதுவாக தொன்று தொட்டு பாவிக்கப்பட்டு வருகிறன. இன்றைய சூழலில் நீரிழிவு (சர்க்கரை வியாதி), உடல் நிறை அதிகரிப்பு பொன்ற காரணங்களுக்காக வெல்லங்களை உண்ண முடியாது பலர் அவதிப்பட்டுக்கொண்டிருப்பது கண்கூடு. இதனால் உணவில் வெல்லம் சேர்க்க முடியாதவர்களுக்கு இனிப்பு சுவையை கொடுப்பதற்காக பலவேறு இரசாயன பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன/அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறன.
பொதுவாக செயற்கை இனிப்பூட்டிகள் வெல்லங்களிலும் பலமடங்கு இனிப்பு சுவை மிக்கவையாக காணப்படுவதால் மிகச்சிறிய அளவில் உள்ளெடுக்கப்படும் போதுமான இனிப்பு சுவையை வழங்க கூடியவை.
அவற்றுக்கு சில உதாரணங்கள்...
1. Acesulfame K
2. Aspartame
3. Saccharin
4. Stevia
இவை உடல் நலனுக்கு உகந்தவை என ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் காலப்போக்கில் மனிதரின் உடல் நலனை பதிப்பதாக சில ஆராய்ச்சி முடிவுகள் வெளியாகியுள்ளன.
1. Acesulfame K
ஐக்கிய அமெரிக்க நாடுகளில் 1988 யூலை மாதத்தில் பாதுகாப்பான செயற்கை இனிப்பூட்டியாக அங்கிகரிக்கப்பட்டது. ஆனால் பின்னர் நடைபெற்ற பல்வேறு ஆராய்ச்சிகள் இச்சுவையூட்டி உடலுக்கு பாதகமான விளைவை தரக்கூடியது என சொல்லப்படுகிறது.
இது கரும்பு வெல்லத்திலும் 200 மடங்கு இனிப்பு சுவையுடையது.
* உள்ளெடுக்கப்படும் இச்சேர்வையின் அளவுக்கு ஏற்ப உடலில் இன்சுலின் ஓமோன் சுரப்பை அதிகரிக்கச்செய்கிறது. இதனால் குருதியில் வெல்ல அளவு குறைய காரணமாகிறது
* எலிகள்/சுண்டெலிகளில் செய்யப்பட்ட ஆய்வுகளில் நுரையீரல்,மார்பகம், குருதி ஆகிய வற்றில் புற்று நோய் ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.
2. Aspartame
இது அஸ்பட்டிக அமிலம், பீனைல் அலனீன் எனும் இரண்டு அமினோ அமிலங்களால் ஆனா ஒரு இரு பெப்ரைட் ஆகும்.
கரும்பு வெல்லத்திலும் 200 மடங்கு சுவை இனிப்பு சுவை மிக்கது
இதை உள்ளெடுப்பதால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகளாக பல சொல்லப்பட்டாலும் அவற்றை நிரூபிக்க இன்னும் அதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவை உள்ளது.
* தலையிடி
* various neuropsychiatric disorders, including
-panic attacks,
-mood changes,
-visual hallucinations,
-manic episodes, and
-isolated dizziness.
3. Saccharin
இது கரும்பு வெல்லத்திலும் 300 மடங்கு இனிப்பு சுவை கொண்டது.
பலகாலமாக செயற்கை இனிப்பூட்டியாக இது பாவிக்கப்பட்டு வந்தாலும் இது ஆய்வுகூட விலங்குகளில் புற்றுநோயை ஏற்படுத்திய காரணத்தால் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இதை கொண்ட உணவுகளில் எச்சரிக்கை வாசகம் இடம் பெறுவது வழக்கமாக இருந்தது.
"use of this product may be hazardous to your health ...contains saccharin which has been determined to cause cancer in laboratory animals."
ஆனால் மனிதரில் புற்று நோயை ஏற்படுத்துவதற்கான ஆதாரம் ஏதும் இல்லாத காரணத்தால் 2001 ம் ஆண்டில் இருந்து இவ்வெச்சரிக்கை மீளப்பெறப்பட்டுவிட்டது.
4. Stevia
இது stevia (Stevia rebaudiana Bertoni), எனும் தாவர இலையில் இருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. கரும்பு வெல்லத்திலும் 250-300 மடங்கு இனிப்பு சுவை உள்ளது. ஜப்பானிய அரசாங்கம் இதை உணவில் பயன்படுத்த அனுமதியளித்துள்ளது. அமெரிகாவில் இதற்கான அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை.