பால் புரதங்கள் ( Milk proteins and peptides)
பால் புரதங்கள், பெப்ரைட்டுக்கள் (Proteins and Prptides) ஆகியவற்றின் உடல் நலன் சார்ந்த பங்களிப்புக்கள்

பால் புரதங்கள், பொதுவாக மனிதனுக்கு தேவையான அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் (Essential Amino Acids), நைதரசனுக்கான மூலமாக கருதப்படுவதோடு, உணவுப்பொருட்களை தயாரிப்பதற்கான ஒரு மூலப்பொருளாகவும் இருந்து வருகிறது. ஆனால் தற்போது பால் புரதங்களும், அவற்றோடு இணைந்த பெப்ரைட்டுக்களும் தொழிற்படு உணவுகளாக (Functional Foods) கருதப்படுவதால் முக்கியத்துவமானவையாக கருதப்படுகிறன.
பால் புரதங்களின் வகைகள்
பசுப்பாலில் இரண்டு உள்ள புரதங்களை பிரதானமாக இரண்டு வகையாக பிரிக்க முடியும்.
1. கேசின் (Caseins)
2. Whey proteins
மொத்த பால் புரதங்களில் கேசின் புரதப்பகுதி 76-86% ஆகவும், Whey proteins 14-24% ஆகவும் இருக்கிறன. மேலும்
கேசின் புரதமானது அல்பா, பிற்றா, காப்பா கேசின்கள் என வகைப்படுத்தப்படும்.
அதே போன்று Whey proteins
Lactalbumin
Lactoglobulin
Bovine serum albumin
Immunoglobulins
ஆகிய புரதங்களை பிரதானமாகவும்
Lactoferrin
Transferrin
Lactoperoxidase
Lysozymes
ஆகிய புரதங்களை சிறிதளவிலும் கொண்டது.
பால் புரதங்களில் காணப்படும் ஒவ்வாமை (Allergy) ஏற்படுத்தும் இயல்புகள்
பால் புரதங்கள் சில பேருக்கு, குறிப்பாக சிறுவர்களுக்கு பால் அருந்தியதன் பின் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.
இதனை ஆங்கிலத்தில் Cow's milk protein allergy என அழைப்பர்.
பால் புரத ஒவ்வாமையால்
தீவிரமற்ற ஒவ்வாமை வெளிப்பாடுகளாக
Rhinitis
Diarrhoea என்பவற்றையும்
மிக தீவிரமன ஒவ்வாமை வெளிப்பாடுகளாக
Asthma
Dermatitis
Anaphylactic shock ஆகிய வற்றையும் சொல்ல முடியும்.
இவ்வாறான ஒவ்வாமை வெளிப்பாடுகள் பாலை அருந்திய உடனடியாக வெளிப்படுத்த படாமல், சிறிது சிறிதாக உடலில் அபிவிருத்தியடைய முடியும். அதாவது நாளாந்தம் பால் பருக பருக உடல் அதை எதிர்ப்பதற்காக எதிர் விளைவுகளை படிப்படியாக உருவாக்கி, இறுதியில் ஒவ்வாமையாக வெளிப்படலாம்.
Casein, lactalbumin, lactoglobulin ஆகிய புரதங்களே ஒவ்வாமை ஏற்பட காரணம் என சொல்லப்படுகிறது.
பொதுவாக குழந்தைகளில் 2-3% ஆனவர்களுக்கு இவ்வாறான சிக்கால் ஏற்பட முடியும்.
பால் புரதங்கங்களில் காணப்படும் புற்று நோய்க்கு எதிரான (Anti-cancer) இயல்புகள்
அதிக கொழுப்பை (fat)கொண்ட உணவுகள், குறைந்த நார் (fibre)சத்துக்களை கொண்ட உணவுகள், குறைந்த அளவு நுண்ணூட்டச்சத்து (micronutrients) கொண்ட உணவுகள் என்பன புற்று நோய் ஏற்பட காரணமாக இருப்பதாக அறியப்பட்டுள்ளது.குறிப்பாக குதப்புற்று நோய் (colorectal cancer ) ஏற்படுவதற்கு.
விலங்குகளில் செய்யப்பட்ட ஆய்வுகளில் பால் புரதங்கள் புற்று நோய் கட்டிகள் (Tumour) உருவாவதை குறைப்பது கண்டறியப்பட்டுள்ளது.
Whey protein எலிகளில் புற்று நோய் ஏற்படுவதை குறைப்பது அறியப்பட்டுள்ளது.
Bovine serum albumin, lactalbumin என்பன மனிதரில் மார்பக புற்று நோயை குணமாக்குவதாக அறியப்பட்டுள்ளது.
பால் புரதங்களில் காணப்படும் உயிர் தொழிற்பாட்டு (bio-active) பெப்ரைட்டுக்கள்
பாலில் காணப்படும் உயிர் தொழிற்பாட்டு பெப்ரைட்டுக்கள் நுண்ணுயிர் எதிரிகளாக (anti microbial), நிர்ப்பீடன சீராக்கிகளாக (immunomodulatory), உயர் குருதியழுத்ததை (hypertension)குறைப்பனவாக, கனியுப்புக்களை பற்றி (mineral binding) வைத்திருக்கும் ஊடகங்களாக தொழிற்படுகிறன.
நிர்பீடன சீரக்கி (immunomodulatory) புரதங்களும், பெப்ரைட்டுக்களும்
மனிதன் நிர்பீடன தொகுதியானது (immune system) மனிதனை தொற்றுக்களில் (infection) இருந்து காப்பதிலும், புற்று நோயை எதிர்ப்பதிலும் பங்காற்றுகிறது.
நிர்பீடனத்தொகுதியில் ஏற்படும் குறைப்பாடு, மனிதனை இலகுவில் நோய்த்தொற்றுக்கு உள்ளாகும் சாத்தியப்பாட்டை அதிகரிக்கிறது.
பால் புரதங்களும், அவற்றின் நொதித்தலால் உருவான பெப்ரைட்டுக்களும் மனிதனின் நிர்பீடன தொகுதியை தூண்டுவது அறியப்பட்டுள்ளது. பால் புரதங்கள் உடலில் காணப்படும் Macrophages எனும் கலங்களின் தொழிற்பாட்டை தூண்டுவது அறியப்பட்டுள்ளது. இக்கலங்கள் உடலில் நுளையும் பிற பொருட்கள், நுணங்கிகள் என்பவற்றை அழிக்கிறன.