காட்டு முயல் பார்த்தீர்களா


இதில் பாருங்கள் மூன்று முயல்கள் புல் மேய்ந்து கொண்டிருக்கிறன. நம்ம ஊரிலும் இவ்வாறான முயல்கள் இருக்கிறன. ஆனால் மனிதருடைய அசுமாத்தம் கண்டதும் பாய்ந்தோடி ஒளித்துவிடும். நம்ம ஆக்களும் விடுவாங்களா கொட்டனும் வேட்டைநாயுமாக திரிந்து முயல் வேட்டை ஆடுவதில் வீரர்கள். அதனால் தான் போலும் அவை சிறு அசுமாத்தம் கண்டதும் ஓடி ஒளிக்கிறன. ஆனால் இங்கு நாமிருக்கும் பகுதியில் தெருக்கரையோரம் சாதாரணமாக இருக்கும். மனித காலடி ஓசையை கேட்டு ஓடுவதில்லை. அதாவது இங்கு யாரும் அவற்றிற்கு தீங்கு செய்வதில்லை என நினைக்கிறேன்.ஏன் நாங்கள் மட்டும் நமது இயற்கை வளத்தை கவனமற்று அழிக்க முற்படுகிறோம்?நம்ம மக்களுக்கு சூழலியல் விழிப்ர்ணர்ச்சி போதாதா?
ஆனால் இதே காட்டு முயல்கள் அளவுக்கதிகமாக பெருகி அவற்றினால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவற்றை கட்டுப்படுத்த அவுஸ்திரேலியாவில் முயன்றதாக இணையத்தில் கட்டுரைகள் இருக்கிறன.