வலைப்பதிவாளர்களுக்கு உடல் நலன் சார் எச்சரிக்கை.
பலவேறு நாடுகளில் இதுவரை வலைப்பதிவாளர் மாநாடுகள் நடைபெற்று முடிந்துள்ளன. அவற்றில் பங்குபற்றியோர் படமும் காட்டியிருந்தனர். அவர்களில் குறிப்பிட்ட சதவிகிதத்தினரது உடல் நிறை அதிகமாக இருக்கும் போல் தோன்றுகிறது.
அவுஸ்திரேலிய மாநாட்டில் கலந்துகொண்டோரில் சுமார் 50% (கலந்துகொண்டதே 2 பேர் தானே)
அமெரிகா ஐக்கிய நாடுகளில் கலந்துகோண்டோரில் கிட்டதிதட்ட 20%
கனடா மாநட்டில் கலந்துகொண்டொரில் 30%
சிங்கபூர், மற்றும் சென்னை மாநாட்டு படங்கள் பார்க்க கிடைக்கவில்லை.
அதிகரித்த உடல் நிறை உடனடியாக பெரிய பிரச்சனையை கொடுக்காவிட்டாலும் காலப்போக்கில் அது பிரச்சனைக்குரியதாக மாறலாம்.
நீரிழிவு
உயர் குருதியழுத்தம்
என்பவை ஏற்பட காரணமாகலாம்.
எனவெ உங்கள் உயரத்துடன் ஒப்பிட்டு உங்கள் நிறை எவ்வாறு இருப்பது விரும்பத்தக்கது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
இதற்காக பயன்படுவது
உடல் திணிவு சுட்டி = உடல் நிறை(kg)/ (உயரம் (m))^2

உதாரணமாக ஒருவருடத்தில் 1000, 000 கிலோகலோரி உணவு உள்ளெடுகிறீர்கள் என வைத்தல். அதில் 1% மான சக்தி உங்கள் உடலில் சேமிக்கப்பட்டால் உங்கள் வருடந்திர நிறை அதிகரிப்பு 1.2-1.7 கிலோகிராம் ஆக இருக்கும். இதேவேகத்தில் போனால் 10 வருடத்தில் 17 கிலோகிராம் நிறைஅதிகரிப்பு உங்கள் உடல் நலனை சீர் குலைக்க போதுமானதாக இருக்கும்.
ஆகவே அனைத்துவலைப்பதிவாளர்களும் தமது உடல் நலனில் அக்கறை எடுத்துகொள்ளுமாறு வேண்டப்படுகிறீர்கள்.
குறிப்பு:
முதலில் இட்ட பதிவு காணமல் போய்விட்டதால் மீள இடப்படுகிறது