குமிழி
கற்றவை கண்டவை... என பலதையும் பகிர முயற்சிக்கிறேன்... ஜெயச்சந்திரன்
Thursday, October 05, 2006
Wednesday, October 04, 2006
இளைமையின் இரகசியம் 2
அண்மைக்காலமாக இளமை பேணும் புதிய பொருட்களை பற்றிய ஆராய்ச்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. குறிப்பாக தாவர பதார்த்தங்களில் இருந்து தயாரிக்கப்படும் புதிய உணவு/ பானங்களில் தற்போது பல ஆராய்ச்சியாளர்களது கவனம் திரும்பியுள்ளது.
அவற்றை பற்றி சிறிது உற்று நோக்குவோம்.
1. African baobab


(படம்ங்கள்: யாஹு தேடு பொறியில் அகப்பட்டவை)
Baobab பழமானது எகிப்தியர்களால்
காய்ச்சல்
Dysentery
இரத்த காயங்கள் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்பட்டது.
அத்துடன் ஆபிரிக்கர்களால் உணவு, மற்றும் மருந்து பொருளாக நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்பழத்தின் சதையானது மிக அதிகளவில் விட்டமின் C ஐ கொண்டிருப்பதுடன்,
ஒட்சியேற்ற எதிரியாக ,
Anti-inflammatory,
analgesic
antipyretic
இயல்புகளை கொண்டிருப்பதால் உணவு கைத்தொழிலில் மிக முக்கியமான ஒரு பொருளாக கருதப்படுகிறது.
இதிலிருந்து பெறப்படும் எண்ணெயானது
விட்டமின் A,D, E
அத்தியாவசியமான கொழுப்பமிலங்களை கொண்டிருப்பதால் அழகு சாதனப்பொருள் தயாரிப்பில் பயன்படுவதுடன்
எக்சிமா (Eczema) சோரியாசிஸ் (psoriasis) போன்றவற்றிற்கான மருந்து தயாரிப்பிலும் பயன்படுகிறது.
உணவு கைத்தொழிலில் உற்பத்தி செய்யப்படகூடிய பொருட்களாக
மென்பானங்கள்
இயற்கை பழ சிமூதிஸ்
பழநிரப்பிகள்
சுகநல குறை நிரப்பிகள்
மற்றும் அழகு சாதனப்பொருட்கள்
2. Devil's claw (புலிநகச்செடி)



(பட உதவி:www.weeds.org.au)
இச்செடியானது நீண்ட காலமாக
காய்ச்சல் (Fevers)
சமிமாட்டு பிரச்சனைகள் ( Digestive disorders) போன்றவற்றுக்கு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதோடு வலி நிவாரணியாகவும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
இது Rheumatoid arthritis இற்கு நிருபிக்கப்பட்ட ஒரு நிவாரணியாகும். அத்துடன் எந்தவிதமான பக்கவிளைவுகளும் இதுவரை கண்டறியப்படவில்லை. இது ஏற்கனவே பலராலும் பாவிக்கப்படுவதுடன், பல மருத்துவர்களால் அங்கிகரிக்கப்பட்ட ஆயுர்வேத?? (Herbal) மருந்து பொருளாக இருக்கிறது.
3. Kigelia pinnata (சொசெச் உருவ பழம்)

இப்பழமானது மருத்துவ பயன்பாட்டில் நீண்ட வரலாற்றை கொண்டது. அத்துடன் பாரம்பரியமான பியர் உற்பத்தியிலும் முக்கியமான ஒரு மூலப்பொருளாகும்.
இதன்
Anti-bacterial
Anti-inflammatory இயல்புகள் காரணமாக
தோல் நோய்கள், தோல் புற்றுநோய் என்பவற்றுக்கு நிவாரணியாக பயன்படுத்தப்படுகிறது.
4. Marula fruit

இதில் இருந்து பெறப்படும் எண்ணெய் நமீபியாவில் ஒலிவ் எண்ணேய்க்கான மாற்றீடாக பயன்படுத்தப்படுகிறது. இதில் இருக்கும் இயற்கை ஒட்சியேற்ற எதிரிகள், மாறும் ஒருமை நிரம்பலடையாத கொழுப்பமிலங்கள் என்பன ஒலிவ் எண்ணேயிலும் 10 மடங்கு பழுதடையும் தன்மை குறைந்ததாக இதை வைத்திருக்கிறது.
இதை தோலுக்கு பூசும் போது
தோல் நீரேற்றம், அழுத்தம் என்பன அதிகரிப்பதுடன், சிவப்பு தன்மை குறைகிறது.
5. Mabola plum ( Parinari curatellifolia)

பாரம்பரியமாக பழம், எண்ணெய் என்பன உணவாக பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் எண்ணெய் தலைமுடிக்கும் பயன்படுத்தப்படுகிறது.
இதன் பழ சதையானது அதிக விட்டமின் C ஐ கொண்டுள்ளது.
எண்ணெய் அழகு சாதன பொருள் உற்பத்தியில் பயன்படுகிறது.
தோலில் மறுசீரமைப்பு, மீளவாக்கம், மறுகட்டமைப்பு நீரேற்றம் ஆகிய தொழில்களை இதன் எண்ணேய் செய்யவல்லது.
6. Ximenia fruit

பாரம்பரியமாக பழம் உணவாக, ஜாம், ஜெல்லி, பாகு என்பனவற்றின் உறபத்தியில் பயன்படுகிறது.
இதில் இருந்து பெறப்படும் எண்ணெய் அழகுசாதனப்பொருட்கள் தாயரிக்கப்படுகிறது. இவ் எண்ணேயானது உராய்வு நீக்கல், நீரேற்றும் இயல்புகள் காரணமாக இளமை பேணும் ஒரு முக்கிய பொருளாக கருதப்படுகிறது.
இது சம்பூக்கள், சொண்டு பூச்சுக்கள், சவற்காரங்கள் என்பவற்றில் கொக்கோ பட்டரிற்கு மாற்றீடாக பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.
ஏற்கனவே அறியப்பட்ட உணவு பொருட்களான சொயா, கற்றாளை (Aloe vera) போன்றவறை சரியாக பயன்படுத்துவதும் மிக அத்தியாவசியனானதாக சொல்லப்படுகிறது.
இத்தருணத்தில் நாம் முக்கியமாக கவனிக்கவேண்டியது மேலே சொன்னவற்றில் பல தாவரங்கள் ஆபிரிக்காவில் பாரம்பரியமாக பயன்படுத்தபடுபவை.
அதே போன்றே அண்மையில் வெந்தயத்துக்கு அமேரிக்க காப்புரிமை பற்றிய செய்தி படிக்க கிடைத்தது.
சில வருடங்களுக்கு முன் வேம்பு, மஞ்சள் என்பனவ்ற்றின் மீதான காப்புரிமை பிரச்சனை எழுந்தது.
எமது ஆயுர்வேத சித்த மருத்துவ மூலிகைகள், தாவரங்கள், பாரம்பரிய உணவுகளின் மருத்துவ குணங்கள் என்பன பற்றி எமது நாடுகளில் போதுமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படமையே இதற்குமுக்கிய காரணம் என்று தான் கூறமுடியும்.
இன்னும் சில காலத்தில் குங்கும பூவுக்கும் காப்புரிமை பிரச்சனை வந்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை.
இளைமையின் இரகசியம் 1
நாம் சிறு பராயத்தில் வயது அதிகரிப்பில் எவ்வளவுக்கு எவ்வாளவு சந்தோசப்படுகிறோமோ, அதே அளவுக்கு குறிபிட்ட வயதுக்கு பின் இளமையாக தோன்ற மாட்டோமா என மனம் ஏங்க ஆரம்பிக்கிறது. பலரும் வயது முதிர்ச்சியடைந்த பின்னும் இளமையாக தோன்ற ஆசைப்படுகிறார்கள். உலக சனத்தொகையானாது 1950 க்கு பிற்பாடு 3 மடங்காக அதிகரித்து இருப்பதுடன் 50 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை எப்போதுமில்லாதவாறு அதிகரித்திருக்கிறது. இதனால இளமையாக இருக்க வைக்கும் உணவுகள், மருந்துகளின் தேவையானது அதிகரித்து செல்கிறது. உடலை இளமையாக தோன்றச் செய்யும் பொருட்கள் இயற்கை மூலங்காளில் இருந்து பெறப்படும் போது அவற்றிற்கான வரவேற்பும் அதிகமாகும். ஐரோப்பாவில் 2003 ஆம் ஆண்டில் வயதாவதை தடுக்கும் பொருட்களின் சந்தை 60% ஆல் அதிகரித்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. அமெரிகாவில் 2009 ஆம் ஆண்டில் 8.7% ஆல் அதிகரிக்கும் என எதிர்வுகூறப்படுவதுடன், இதன் பெறுமதி 30.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
உடலை இளமையாக வைத்திருக்கும் காரணிகளாக
A. ஒட்சியேற்ற எதிரிகள் (Anti-oxidants)
இன்றைய திகதிவரை வயது முதிர்ச்சியால் ஏற்படும் விளைவுகளை மீளமைக்கும் சாத்தியமான முறைக்கள் கண்டறியப்படவில்லை. ஆயினும் வயதாவதில் பங்கெடுக்கும் சில உயிர் தொழிற்பாடுகளும் அவற்றினுடைய பொறிமுறையும் கண்டறியப்பட்டுள்ளன. அவையாவன, சூழலியல், ஓமோன் சம்பந்தமான காரணிகளாகும், இவற்றின் செயற்பாடுகளை குறைக்க/ வேறு காரணிகள் மூலம் இவற்றின் செயற்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.
மிக முக்கிய சூழல் காரணியாக உயிர் மூலக்கூறுகள் free radicals களால் ஒட்சியேற்றமடைவதை கருதலாம். இது தோல்/ சருமம் வயதாவதற்கும் மற்றும் சில தாக்கங்களுக்கும் காரணமாகும். கழியூதா கதிர்கள் (UV) கதிர் வீச்சு இத்தாங்கங்களை தூண்டும் ஒரு முக்கிய காரணியாகும் ஆனால் இயற்கையாக சூரிய ஒளியை வடிகட்டும் பொருட்கள் இவ்வொளிபகுதியை தடுத்து நிறுத்தி விடுகிறன.
வேறு சில ஒட்சியேற்ற செயன்முறைகள் கல (cell) மட்டத்தில் சேதங்களை ஏற்படுத்துவதால் பல வயதாதல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட காரணமாகிறன. உ-ம்: Arteriosclerosis
பல இயற்கையான ஒட்சியேற்ற எதிரிகள் இச்செயன்முறைகளை எதிர்ப்பதில் பங்கெடுக்கிறன. அவையாவன
1. விட்டமின் A,C, E
2. Taurine
3. நொதியங்கள்
a. superoxide dismutase
b. catalase
c. Gulutathione peroxidase
வேறு இயற்கையான ஒட்சியேற்ற எதிரிகளும் அவை அடங்கியுள்ள உணவு பொருட்களும்
1. அந்தோசயனின் (anthocyanes) - திராட்சைப்பழம்
2. Curcumin- மஞ்சள்
3. Flavanoids - Citrus பழங்கள், Green tea
4. Isoflavones -Red clover , சோயா
5. Lycopenes- தக்காளி
6. Carotenoids- கரட்
7. Taurine
8. Rosemarinic acid -Rosemary, oregano, marjoram, thyme, peppermint, comfrey, parsley,
balm, sage, hyssop, basil, lavender
9. ஓமேக 3 கொழுப்பமிலம்.
B. ஓமோன்கள்
எல்லா வயதாதல் சம்பந்தமான பிர்ச்சனைகளும் ஒட்சியேற்ற தாக்கங்களால் மட்டும் ஏற்படுவதில்லை. பால் ஓமோன்கள் ( Sexual hormones) வயது அதிகரிக்கும் போது அவற்றின் சுரப்பு குறைவடைவதாலும் ஏற்படுகிறன.
உ+ம்: மெனொபோசல் (Menopopausal)
பல தாவரங்களில் காணப்படும் phytoestrogens எனும் பதார்த்தங்கள் (உ+ம்: isoflavones, lignanes) பால் ஓமோன்ககளின் செயற்பாட்டை ஒத்த செயற்பாட்டை தரக்கூடியவையாக இருப்பதால் மெனோபோசல் இன் பக்க விளைவுகளில் இருந்து பாதுகாக்க உதவுகிறன.
அத்துடன் இவை ஒஸ்ரியோபொரோசிஸ், இதய நோய்கள், ஓமோனுடன் சம்பந்தப்பட்ட புற்றுநோய் ஆகியவற்றில் இருந்தும் பாதுகாப்பை தருகிறன.
C. வேறு பொருட்கள்
வெறு வயது போதலுடன் சம்பந்தமான நோய்களில் இருந்து பாதுகாப்பை தரகூடிய இயற்கை மூலங்களாக
Arthritis க்கு எதிரான இயற்கை உணவுகள்
a. devil's claw
b. boswellia
c. மஞ்சள்
d. இஞ்சி
e. stinging nettle
f. cat's claw
Heart problems எதிராக
a. whitethorn
b. camphor
புற்றுநோய்க்கு எதிராக
a. cat's claw
b. mistletoe
மிகுதி அடுத்த பகுதியில்........